வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் | அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் | தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின் | பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்! | கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ? | 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ? | ரூ.100 கோடி வசூலித்த 'மாளிகப்புரம்' | 'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் | இந்தியன் 2 - ஹெலிகாப்டரில் தினமும் வந்து செல்லும் கமல்ஹாசன் | 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் ஓட்டுப்பதிவு காலை 7.30 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை நடந்தது.
ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ் தலைமையிலான சங்காரதாஸ் அணியினர், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
அப்போது அவர்கள், எந்தவித பிரச்னையும் இல்லாமல் சிறப்பாக தேர்தலை நடத்த உதவிய போலீசாருக்கு நன்றி. நடிகர் சங்க தேர்தலில் 1579 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. தபால் ஓட்டுக்களில் நிறைய குளறுபடிகள் உள்ளன. பாண்டவர் அணியின் பிரவீன் காந்தி தபால் ஓட்டில் குளறுபடி ஏற்படுத்த முயன்றார். 2 வாரங்களுக்கு பிறகு ஓட்டுப்பதிவு நடைபெறும் என கோர்ட் கூறி உள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுபெட்டிகளை வங்கி லாக்கரில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 1100 தபால் ஓட்டுக்களில் சுமார் 1000 பேர் வரை ஓட்டளித்துள்ளதாக கூறப்படுகிறது. பலரின் பெயர்கள் நீக்கப்பட்டதால் பலரால் ஓட்டளிக்க முடியாமல் போனது. இன்னும் என்னவெல்லாம் குளறுபடிகள் செய்துள்ளார்கள் என தெரியவில்லை. தபால் ஓட்டுக்களில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. அதன் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்றனர்.