Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்க தேர்தல் எங்கே.? - நாளை நடக்குமா.?

22 ஜூன், 2019 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Will-nadigar-sangam-election-held-tomorrow

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாளை (ஜூன் 23ம் தேதி) தேர்தல் நடக்கிறது. நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் களம் காண்கின்றனர். தேர்தலை நடத்த ஆரம்பத்தில் இருந்தே பல எதிர்ப்புகள் எழுந்தன. தேர்தல் நடத்த தேர்வு செய்யப்பட்ட இடமான எம்ஜிஆர் - ஜானகி கல்லூரிக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மறுத்தது. இதனால் கோர்ட் சென்றது நடிகர் சங்கம். ஆனால் கோர்ட்டும் அங்கு தேர்தல் நடத்த அனுமதி மறுத்தது.

இதற்கிடையே, நடிகர் சங்கத்தில் 61 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, பதவிக்காலம் முடிந்து காலநீட்டிப்பு செய்யப்பட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்தாதது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால் தேர்தலை நிறுத்தி வைப்பதாக தென் சென்னை பதிவாளர் உத்தரவிட்டார். இதனால் நாளை தேர்தல் நடத்துவதில் சிக்கல் நீடித்தது. இதை எதிர்த்து விஷால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நேற்று இரவு தேர்தல் நடத்த கோர்ட் அனுமதி அளித்தது. அதேசமயம், தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என உத்தரவிட்டது.

இதையடுத்து தேர்தல் நடத்துவதற்காக ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. ஆனால் தேர்தல் எங்கு நடத்துவது என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் அப்படியே இன்று நண்பகலுக்குள் இடம் தேர்வானால் கூட, அதற்கான போலீஸ் அனுமதி, தேர்தல் நடத்த செய்ய வேண்டிய ஏற்பாடுகள், நடிகர்கள் ஓட்டளிக்க வசதியாக செய்ய வேண்டிய விஷயங்கள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு, அவர்கள் வந்து செல்ல வசதியான மற்ற விஷயங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் நாளை காலை தேர்தல் நடைபெறுவதற்குள் செய்து முடிக்க முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. அதனால் நாளை தேர்தல் நடப்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது.

இருப்பினும் எப்படியேனும் தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என பாண்டவர் அணியினர் உறுதியாக உள்ளனர். அதுதொடர்பான ஆலோசனை, தேர்தலை நடத்தும் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடந்து வருகிறது. இன்று நண்பகல் அல்லது மாலைக்குள் எங்கு தேர்தல் நடக்கும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணை முதல்வருடன் சந்திப்பு

தேர்தல் நடத்துவது மற்றும் பாதுகாப்பு தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை, பாண்டவர் அணியினர் சந்தித்து பேசி உள்ளனர்.




அவசர மனு
இதற்கிடையே நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு தர வேண்டு என கோரி விஷால் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கை அவசர வழக்காக எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்பதாக நீதிபதி அறிவித்தார். அதன்படி வழக்கு இன்று மாலைக்குள் விசாரணைக்கு வர இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பிகில்' என்ற பெயர் எதற்கு ?'பிகில்' என்ற பெயர் எதற்கு ? ஹிந்தியில் ரீமேக்காகும் சூப்பர் டீலக்ஸ் ஹிந்தியில் ரீமேக்காகும் சூப்பர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in