Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் வெளிவரும் ஹாலிவுட் ஸ்பைடர் மேன்

22 ஜூன், 2019 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Spider-man-from-Home-releasing-in-Tamil

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் ஸ்பைடர் மேனுக்கு எப்போதுமே தனி சிறப்பு உண்டு. அதிகமான குழந்தை ரசிகர்களை கொண்டவர் ஸ்பைடர் மேன். இதுவரை ஏராளமான ஸ்பைடர் மேன் படங்கள் வந்துள்ளது. ஸ்பைடர்மேன் என்கிற கேரக்டர் ஒன்று என்றாலும் அவை வெவ்வேறு கதைகளாக வந்துள்ளன. அந்த வெவ்வேறு கதைகளுக்கு தனித்தனியாக பல பாங்கள் வந்துள்ளது.

அந்த வரிசையில் கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்த ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங் படத்தின் 2ம் பாகமாக வெளிவருகிறது ஸ்பைடர் மேன் பேர் பிரம் ஹோம். அதாவது முதல் பாகத்தில் வீட்டுக்குள் வந்தவர், இந்த பாகத்தில் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்.

முதல் பாகத்தில் ஸ்பைடர் மேனாக நடித்த டாம் ஹோலேண்ட்தான் இந்த பாகத்திலும் நடித்திருக்கிறர். ஜென்டயா ஹீரோயின். அமெரிக்க நகரங்களில் சாகசம் புரிந்த ஸ்பைடர்மேன், இந்த முறை ஐரோப்பிய நாடுகளில் சாகசங்கள் நிகழ்த்துகிறார். ஐரோப்பாவை ஜாலியாக சுற்றிப் பார்க்க கிளம்புகிறார் ஸ்பைடர் மேன். அவர் பின்னாலேயே உலகை அழிக்கும் ஒரு நாசகார சக்தியும் செல்கிறது.

அவற்றை அழித்து உலகத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. நவீன தொழில் நுட்பத்தின் ஒட்டுமொத்த சக்தியையும் பயன்படுத்தி இந்த ஸ்பைடர்மேனை உருவாக்கி இருக்கிறார் ஜான் வாட்ஸ். வருகிற ஜூலை 5ந் தேதி வெளிவருகிறது. இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை விஷ்ணுப்ரியா திருமணம்: தயாரிப்பாளர் மகனை மணந்தார்நடிகை விஷ்ணுப்ரியா திருமணம்: ... 'பிகில்' என்ற பெயர் எதற்கு ? 'பிகில்' என்ற பெயர் எதற்கு ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in