Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பா தலைப்பு, மகனுக்கு கிடைத்தது

20 ஜூன், 2019 - 12:08 IST
எழுத்தின் அளவு:
Sibiraj-got-Valter-movie-title

சத்யராஜ், வால்டர் வெற்றிவேல் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அவர் மகன் சிபிராஜ் நடிக்கும் படத்திற்கு வால்டர் என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் "வால்டர் என்ற தலைப்பும், கதையும் என்னிடம் உள்ளது. அதை நான் விக்ரம் பிரபு, அர்ஜூன் வைத்து தயாரிக்க இருக்கிறேன்" என்று விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமன சிங்காரவேலன் கூறி நீதிமன்ற நோட்டீசும் அனுப்பினார்.

பின்னர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்து அது சுமுகமாக முடிந்துள்ளது. படத்தின் தலைப்பை சிபிராஜுக்கு விட்டுத் தருவதாக சிங்காரவேலன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் கொடுத்து விட்டார். இது தொடர்பாக வால்டர் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் கூறியதாவது:

சிபிராஜின் தந்தை சத்யராஜின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்த படத்துக்கு வால்டர் என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் எல்லாம் முடிந்து தலைப்பு எங்கள் வசமானது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது படப்பிடிப்பு கும்பகோணத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கமல்ஹாசன் தலைமையில் கிரேஸி மோகன் நாடகம் மீண்டும் ஆரம்பம்கமல்ஹாசன் தலைமையில் கிரேஸி மோகன் ... பிரேக்கிங் நியூஸ் முழு கதையையும் சொன்ன இயக்குனர் பிரேக்கிங் நியூஸ் முழு கதையையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in