Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசன் தலைமையில் கிரேஸி மோகன் நாடகம் மீண்டும் ஆரம்பம்

20 ஜூன், 2019 - 12:04 IST
எழுத்தின் அளவு:
Crazy-drama-backs-under-Kamalhaasan-support

நாடக ஆசிரியர், சினிமா வசனகர்த்தா, நகைச்சுவை நடிகர் என கலையுலகில் தனி முத்திரை பதித்தவர் மறைந்த கிரேஸி மோகன். அவருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையில் நெருங்கிய நட்பு உண்டு. இருவரும் இணைந்து 20 படங்களுக்கும் மேல் பணிபுரிந்துள்ளனர். 'மைக்கேல் மதன காமராஜன்' படம் தான் கிரேஸி மோகனுக்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கிரேஸி மோகன் மறைவுக்கு கடைசி வரை இருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார் கமல்ஹாசன்.

கிரேஸி மோகன் மறைவுக்குப் பின்னும் அவருடைய நாடகங்களை மேடையேற்ற அவரது நாடகக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் ஜுன் 30ம் தேதி சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் கிரேஸி மோகன் கடைசியாக எழுதிய 'கிரேஸி சூப்பர் லீக்' நாடகத்தின் 100வது காட்சியை நடத்த உள்ளனர். அது மட்டுமல்ல தொடர்ந்து கிரேஸி மோகன் எழுதிய நாடகங்களையும் நடத்த உள்ளனர்.

இந்த நிகழ்வுக்காக மேலும் பல பிரபலங்களை அழைத்துள்ளதாகவும் தெரிகிறது. கிரேஸி மோகன் உயிருடன் இருக்கும் போதே கமல்ஹாசனிடம் இந்த 100வது காட்சிக்காக தேதி கேட்டிருந்தாராம். அவருடைய ஆசைப்படியே கமல்ஹாசன் வந்து அவரது நினைவைப் பகிர்ந்து கொள்ள உள்ளதாக கிரேஸி நாடகக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

மேலும் கமலே, கிரேஸியின் சகோதரர் பாலாஜியிடம் தொடர்ந்து நாடகங்களை ஏற்று நடத்துங்கள், நான் உங்களுடன் இருக்கிறேன் என கூறியிருக்கிறார். இதை ஒரு பேட்டியில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். கிரேஸி மறைந்தாலும் அவரின் நாடகங்கள் தொடர்ந்து நடக்கும் என்பது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஜூலை 14ல் இயக்குனர் சங்கத் தேர்தல்ஜூலை 14ல் இயக்குனர் சங்கத் தேர்தல் அப்பா தலைப்பு, மகனுக்கு கிடைத்தது அப்பா தலைப்பு, மகனுக்கு கிடைத்தது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Jayvee - chennai,இந்தியா
24 ஜூன், 2019 - 10:39 Report Abuse
Jayvee கிரேசி மோகனுக்கு பதில், சந்தானம் இந்த நாடகத்தில் அவரின் பாத்திரத்தை ஏற்று நடித்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது..
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
21 ஜூன், 2019 - 19:44 Report Abuse
Vasudevan Srinivasan தொடர்ந்து அவரது (கிரேஸி மோகன்) நாடகங்களை நடத்துவதே அவருக்கு செய்யும் உண்மையான மரியாதை..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in