Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பக்கிரி' - பிரெஞ்சில் ஓடவில்லை, தமிழில் ஓடுமா ?

20 ஜூன், 2019 - 10:29 IST
எழுத்தின் அளவு:
Did-Pakkiri-will-get-success-in-Tamil

தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகர் எனப் பெயரெடுத்தவர் தனுஷ். ஹிந்தியில் 'ராஞ்சனா, ஷமிதாப்' ஆகிய படங்களில் நடித்தவர். அடுத்து சர்வதேசப் படமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் பகிர்' என்ற ஆங்கிலம், பிரெஞ்ச் மொழியில் உருவாக்கப்பட்ட படத்தில் நடித்தார்.

இந்தப் படம் பிரான்ஸ் நாட்டில் கடந்த வருடம் மே மாதம் 30ம் தேதி வெளியானது. சுமார் 20 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் உருவான இந்தப் படம் வெறும் 2.4 மில்லியன் யுஎஸ் டாலர் மட்டுமே வசூலித்தது. பிரெஞ்சு மொழியிலும் உருவாக்கப்பட்டதால் பிரான்ஸ் நாட்டில் மட்டும் 12 லட்சம் யுஎஸ் டாலர் வசூலித்தது. அதற்கடுத்தபடியாக நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுமார் 9 லட்சம் யுஎஸ் டாலர் வசூலித்தது. எதிர்பார்த்த வெற்றியை இந்தப் படம் பெறாமல் வசூல் ரீதியாக தோல்விப் படமாக அமைந்தது.

இப்போது இந்தப் படத்தை 'பக்கிரி' என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்து, நாளை இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வெளியிட உள்ளார்கள். தனுஷ் படம் என்பதால் இங்கெல்லாம் ஓரளவிற்கு வசூலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் படத்தை ஏற்பார்களா அல்லது வெளிநாடுகளில் நடந்ததைப் போன்று நடக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தரணி ஆள வா தளபதி  - விஜய் பிறந்தநாள் டி.பி., புதிய சர்ச்சை ஆரம்பம்தரணி ஆள வா தளபதி - விஜய் பிறந்தநாள் ... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி வழக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
21 ஜூன், 2019 - 17:14 Report Abuse
Vasudevan Srinivasan உங்களுக்கு ஏன் இந்த அல்ப ஆசை தமிழில் வெற்றிபெறட்டும் என்று நல்லவிதமாக சொல்லுங்க சார்..
Rate this:
KayD - Mississauga,கனடா
20 ஜூன், 2019 - 17:22 Report Abuse
KayD ஏற்கனவே இந்த படம் பற்றி நான் மெசேஜ் pottaen..neenga publish pannala. indha padam theater ku vandhiu plane la including india la vandhu 6 months ku mela aachi. its 100% failure movie. Idhu dhansuh ku act panna list kooduthal onnu also an International movie. Idhu Dhanush kae theriyum.avarai indha padam pathi yosichittu iruka maatar. Dhansuh is one of my favorite actors. Indha padam romba expect panni paatahen .. but onnum solrathuku illai.. Best wishes Dhansuh for all your upcoming movies ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in