Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூன் 21ல் பர்ஸ்ட் லுக் : இதுதான் விஜய் 63 முக்கிய அறிவிப்பு

19 ஜூன், 2019 - 18:17 IST
எழுத்தின் அளவு:
Vijay-63-First-look-on-June-21

'தெறி, மெர்சல்' படங்களின் வெற்றியால் அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கால்பந்தாட்டம் தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ்., நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, இந்துஜா, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று(ஜூன் 19) மாலை 6மணிக்கு வெளியிடப்படும் என ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா டுவிட்டரில் நேற்று அறிவித்தார். இதனால் விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக்காக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர்.

தளபதி 63 அப்டேட் என ஹேஷ்டாக் உருவாக்கி டுவிட்டரில் டிரெண்ட்டிங்கிலும் கொண்டு வந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மாறாக ஜூன் 21ம் தேதி மாலை 6மணிக்கு விஜய் 63 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், மறுநாள் ஜூன் 22, விஜய் பிறந்தநாளில் நள்ளிரவு 12 மணியளவில் செகண்ட் லுக் வெளியாகும் என்ற அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டார் அர்ச்சனா.


விஜய் ரசிகர்களுக்கு இது சற்றே ஏமாற்றமாக இருந்தாலும், இந்த அறிவிப்பை உற்சாகமாக சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். விஜய் பிறந்தநாள் வேற லெவல் என்கிற ரீதியில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அன்புள்ள அண்ணா ; விஜய் பிறந்தநாளில் உருகிய சாயிஷாஅன்புள்ள அண்ணா ; விஜய் பிறந்தநாளில் ... தரணி ஆள வா தளபதி  - விஜய் பிறந்தநாள் டி.பி., புதிய சர்ச்சை ஆரம்பம் தரணி ஆள வா தளபதி - விஜய் பிறந்தநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
20 ஜூன், 2019 - 11:13 Report Abuse
JMK ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in