Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு

19 ஜூன், 2019 - 12:33 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-Election-Stopped

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்கும்படி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஜூன் 23ம் தேதி தேர்தல் நடக்காது என தெரிகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற ஜூன் 23ம் தேதி, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர்., ஜானகி கல்லூரியில் நடக்கிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் களம் காண்கின்றனர்.

இந்த தேர்தலை நடத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த போலீஸ் அனுமதி மறுத்தது. இதனால் கோர்ட்டை நாடினர் விஷால் அணியினர். ஆனால் கோர்ட்டும் அங்கு தேர்தல் நடத்த அனுமதி மறுத்துவிட்டது. இந்நிலையில் வேறு இடத்தில் தேர்தலை நடத்தும்படி கோர்ட் அறிவுறுத்தி இருந்தது.

61பேர் நீக்கம்
இதற்கிடையே நடிகர் சங்கத்தில் கடந்த முறை ஓட்டளித்த 61 பேர் இந்த முறை நீக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து 61 பேரும் தனித்தனியாக பதிவாளரிடம் புகார் கொடுத்தனர். இதற்கு பதிலளிக்கும்படி நடிகர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நோட்டீசுக்கு நடிகர் சங்கம் விளக்கம் அளித்து பதிவாளருக்கு பதில் அனுப்பி உள்ளது. அதில் சந்தேகம் உள்ள 61 உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு 4 முறை கடிதம் அனுப்பினோம். அவர்கள் எந்த பதிலும் அளிக்காத காரணத்தால் செயற்குழு தீர்மானத்தின்படி அவர்கள் வாக்களிக்கும் தகுதியை நிறுத்தி வைத்திருக்கிறோம் என தெரிவித்திருந்தனர்.

விசாரிக்க வேண்டும்
இந்நிலையில் பதிவாளர் வெளியிட்ட அறிக்கை விபரம் வருமாறு : விஷால் அளித்த விளக்கத்தில் சங்கத்தின் மீது புகார் செய்தவர்களில் 44 பேர் தொழில்முறை உறுப்பினர் பதவியிலிருந்து தொழில்முறை அல்லாத உறுப்பினர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், 4 உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களாகவும், 13 உறுப்பினர்கள் தொழில்முறை உறுப்பினர்களாக தொடர்வதாகவும் அவர்கள் வரும் தேர்தலில் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாங்கள் அவர்களிடம் நேரில் விசாரணை செய்து உண்மை இருக்கும் பட்சத்தில் தங்களின் உத்தரவை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளாம். எனவே மேற்படி நபர்கள் அனைவரையும் விசாரணைக்கு அழைத்து புகாரில் உண்மை உள்ளதா என்பது குறித்து விசாரித்து தேர்தலில் ஓட்டளிக்க தகுதி உள்ள உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டி உள்ளது.

எந்த உறுப்பினர் பட்டியல் கொண்டு தேர்தல்
மேலும் 2017 - 18 ஆண்டுக்கான உறுப்பினர் பட்டியலின் கோர்வை தென்சென்னை மாவட்ட பதிவாளரிடத்தில் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ள நிலையில் எந்த வருட உறுப்பினர் பட்டியலை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடைபெறுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

தேர்தலை நிறுத்த உத்தரவு
2015-18ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவிக்காலம் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. நவம்பரில் இருந்து 6 மாத காலத்திற்கு தேர்தலை தள்ளி வைத்து கட்டட பணி முடிவடைந்தவுடன்(2019 ஏப்ரல்) தேர்தல் நடத்த பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி நீட்டிப்பு காலத்திற்குள் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சங்க நிர்வாகிகளின் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களால் தேர்தல் தொடர்பாக எடுத்த முடிவின் நிலை குறித்தும் பரிசீலிக்க வேண்டி உள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது ஏற்புடையது அல்ல. ஆகவே, அனைத்து விபரங்கள் குறித்து தீர்வு காணும் வரை தேர்தல் குறித்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்க ஆடையிடப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


கவர்னர் உடன் விஷால் சந்திப்பு
இதற்கிடையே விஷால், கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்ட பாண்டவர் அணியை சேர்ந்த நிர்வாகிகள், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர். நடிகர் சங்க தேர்தலை அமைதியான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் நடத்துவது தொடர்பாக கவர்னரை சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் : அரசியல் சாசனத்தில் உயர் பொறுப்பில் இருப்பதால் கவர்னரை சந்தித்தோம். நடிகர் சங்க தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆளுநரிடம் மனு வழங்கியுள்ளோம். தேர்தல் விஷயத்தில் கோர்ட்டில் நல்ல முடிவு வரும் நம்புகிறோம் என்றார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகைமிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ... தேர்தல் - விஷால் தொடர்ந்த வழக்கு : ஐகோர்ட் ஒத்தி வைப்பு தேர்தல் - விஷால் தொடர்ந்த வழக்கு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சீனி - Bangalore,இந்தியா
20 ஜூன், 2019 - 08:54 Report Abuse
சீனி மார்கெட் இருந்து நல்லா நடிக்கும் போது, சங்கத்தின் செலவு பல கோடி. அப்புறம் மார்கெட் போய் வயதானப்புறம் நலிந்த கலைஞர் என அரசாங்கத்திடம் பென்சன் பிச்சை எடுக்கவேண்டியது. ஊரை ஏமாத்துற கூட்டம். சட்டசபை தேர்தலுக்கே இந்த பில்டப் இருக்காது, மக்கள் மூடர்களா இருக்கும் வரை இது தொடரும்.... , எந்த நடிகனும் தேர்தல்ல ஜெயிச்சா நமக்கு ஒருவாய் தண்ணி ஊத்தமாட்டான். குடிக்க தண்ணி இல்லை, எல்லாம் குடத்தோட ஓடுங்க இல்லை, மழைக்கு பூஜை பண்ணுக்க....
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19 ஜூன், 2019 - 19:58 Report Abuse
Natarajan Ramanathan ஒரு ஆயிரத்து முன்னூறு கூத்தாடிகள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்வதும் அதற்கு மீடியா இவ்வளவு கவரேஜ் கொடுப்பதும் அநியாயம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in