Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன்

19 ஜூன், 2019 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Injured-:-7-hours-operation-to-Actor-Sharwanand

பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்த். தமிழில் எங்கேயும் எப்போதும், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் நடித்து வருகிறார். த்ரிஷா கேரக்டரில் சமந்தா நடிக்கிறார்.

இதன் படபிடிப்புகள் மும்முரமாக நடந்து வரும் நேரத்தில் சர்வானந்த் இன்னொரு படத்திற்காக ஸ்கை டைவிங் பயிற்சி பெற தாய்லாந்துக்கு சென்றார். அந்த பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரது தோள்பட்டை எலும்பு இறங்கியது. தாய்லாந்தில் முதலுதவி சிகிச்சை பெற்றுவிட்டு அவசரமாக ஐதராபாத் திரும்பினார். இங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு நேற்று 7 மணி நேரம் ஆபரேஷன் செய்து தோள்பட்டை எலும்பை சரி செய்தனர்.

சர்வானந்த் 2 மாதம் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையல் 96 ரீமேக் படம் நிறுத்தப்பட்டிருக்கிறது. 2 மாதத்திற்கு பிறகு படப்பிடிப்பை தொடர தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1ஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த ... மிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை மிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in