Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்

18 ஜூன், 2019 - 18:01 IST
எழுத்தின் அளவு:
Keerthi-Pandiyan-tears-at-stage

கனா படத்தில் நடித்த தர்ஷன் நாயகனாக நடித்துள்ள அடுத்த படம் தும்பா. இந்த படத்தில் நாயகியாக நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் அறிமுகமாகிறார். ஹரிஷ்ராம் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதையில் உருவாகியிருக்கிறது.

இந்தபடத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை கீர்த்தி பாண்டியன் பேசும்போது, நான் நடிக்க வந்தபோது சில கதைகளை வேண்டாம் என்று தவிர்த்துள்ளேன். அதோடு என்னையும் சில டைரக்டர்கள் நிராகரித்துள்ளார்கள். எனது ஒல்லியான தோற்றம் மற்றும் கலரை வைத்து தான் என்னை நிராகரித்தார்கள்.

இருப்பினும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்தான் இந்த தும்பா இயக்குநர் ஹரிஷ்ராம் என்று சொல்லும்போதே கண்கலங்கிய கீர்த்தி பாண்டியன், சிறிது நேரம் பேச முடியாமல் தடுமாறிப்போய் நின்றார்.

அதன்பிறகு படக்குழுவினர் தேற்றி அவரை பேச வைத்தபோது, இந்த படத்திற்காக நான் ஷாட்ஸ் அணிந்தபோது அது எனக்கு செட்டாகவில்லை. ஆனால் டைரக்டர் எனக்கு மன தைரியம் கொடுத்து என்னை நடிக்க வைத்தார். என் மீது நம்பிக்கை வைத்த அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று உணர்வுப்பூர்வமாக பேசினார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடுஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் ... சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

skv - Bangalore,இந்தியா
22 ஜூன், 2019 - 06:55 Report Abuse
skv<srinivasankrishnaveni> பெண்ணே கருப்பு என்று நீ மட்டும் இல்லேம்மா பலரும் மெய்யான வாழ்க்கையிலேயும் வெறுத்து ஒதுக்கப்படுறாங்களே தெரியுமா ?ஒரு தோழிக்கு அவள் நிறம் கம்மி என்று வேலைக்கே போகாத ஒரு முழுசோம்பேறிக்கு கட்டிவச்சாங்க அவள் பாட்டி, தெரியுமா பாட்டி எழுவத்தஞ்சுவயசுலே செத்தாங்க பேத்தி தன் 70 வயதுலே அந்த சோம்பேறியுடனே வாழ்ந்து செத்தா. மகள் இருவர் படிச்சுவேலைக்குவந்து பெற்ரோரைக் காப்பாற்றினா ஆனால் சாவும் வரை அந்த மனுஷன் வேலைக்கே போவளே
Rate this:
Yuva Rajan - chennai,இந்தியா
19 ஜூன், 2019 - 12:33 Report Abuse
Yuva Rajan உன் மேல் தப்பு இல்ல அம்மா தமிழ் ரசிகர்கள் தமிழ் தமிழ் என்று சொல்லி கலரா இருக்கிற கேரளா பொண்ணுங்க பின்னாடி போறது தான் தப்பு
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
21 ஜூன், 2019 - 11:46Report Abuse
uthappaதமிழ் ரசிகர்களை குறை சொல்லாதீங்க, தமிழ் போராளி இயக்குனர்களை சொல்லுங்க. பொண்ணுங்களுக்கு இவனுங்க தமிழ் நாட்டில் தேட மாட்டாங்க. இவனுங்க சாயம் தெரிந்து விடுமே....
Rate this:
muthu Rajendran - chennai,இந்தியா
19 ஜூன், 2019 - 12:06 Report Abuse
muthu Rajendran நன்று விசுவாசமாக இருங்கள். விஜயகாந்திடம் இருந்தவர்கள் எப்படி விசுவாசமாக இருந்தார்கள் என்பதை வைத்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
Rate this:
19 ஜூன், 2019 - 11:13 Report Abuse
சந்தோஷ் ஒல்லியான உருவம், shorts போட்டும் செட் ஆகலை, கலர் இல்லை ஆனா நடக்க மட்டும் ஆசை இருக்கு
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19 ஜூன், 2019 - 03:57 Report Abuse
J.V. Iyer ஒல்லியான தோற்ற்றம் தானே அழகு? உலகம் ஒரு முறையில் சிந்திக்கும்போது தமிழ் மக்கள் வேறுவிதமாக சிந்திக்கிறார்கள். இது அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே தெரிந்தது. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்.. என்ற திருக்குறளை மறப்பது நன்றன்று.
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
19 ஜூன், 2019 - 08:59Report Abuse
Vijayயாருடா இவன் ... ஒவ்வ்ருத்தருக்கு ஒவ்வொன்னு அழகா தெரியும் . இவ்வளவு பேசுற உனக்கு இந்தியாவில் வோட் உரிமை இருக்கா...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in