Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நேர்கொண்ட பார்வை' - அதிக விலை?

18 ஜூன், 2019 - 16:57 IST
எழுத்தின் அளவு:
Nerkonda-Paarvai-movie-high-cost?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆசைப்படி அஜித் நாயகனாக நடிக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தை எடுத்து முடித்துவிட்டார் அவரது கணவர் போனி கபூர். கடந்த வாரம் படத்தின் டிரைலரையும் வெளியிட்டார்கள். டிரைலர் முழுவதும் அஜித்தின் நீதிமன்றக் காட்சிகள்தான் நிரம்பியிருந்தது. அஜித் அதிகமாக வசனம் பேசி நடித்த படம் என்றால் 'சிட்டிசன்' படத்தைத்தான் சொல்ல வேண்டும். அதற்குப் பின் அஜித் அதிகமாக வசனம் பேசி நடித்த படமாக 'நேர்கொண்ட பார்வை' படம்தான் இருக்கும் எனத் தெரிகிறது.

படத்தின் டிரைலரும் பெரும் அளவில் யூ டியூபில் சாதனை எதையும் புரியவில்லை. இப்போதுதான் ஒரு கோடி பார்வையைக் கடந்துள்ளது. இன்னும் பத்து லட்சம் லைக்குகளையும் பெறவில்லை. இதுவே, படம் மீதான எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு.

அஜித் போன்ற நடிகர்கள் வித்தியாசமான படங்களில் நடிக்கவில்லை என ரசிகர்கள் பலரும் நினைப்பதுண்டு. அப்படி நடித்தால் அந்தப் படங்களுக்கான வரவேற்பு இப்படித்தான் இருக்கும் என்பதை 'நேர்கொண்ட பார்வை' டிரைலர் உணர்த்துகிறது.

இருப்பினும் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு தயாரிப்பாளர் போனி கபூர் மிகப் பெரும் விலை சொல்வதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். முந்தைய 'விஸ்வாசம்' பட வசூலை மனதில் வைத்துக் கொண்டு அவர் அப்படி சொல்கிறார் என்கிறார்கள். யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை என்றால் படத்தை சொந்தமாகத்தான் அவர்கள் வெளியிட வேண்டும். என்ன நடக்கப் போகிறது என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, முதல் பார்வைஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, ... 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் 'கொலையுதிர் காலம்' 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
19 ஜூன், 2019 - 14:54 Report Abuse
JMK அஜித் படம் இதுவரை இருநூறு கோடி தாண்டியதில்லை ? என்ன விலை கொடுத்தாலும் அஜித் படம் இருநூறு கோடி தாண்டுமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in