ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |
மம்முட்டி நடிப்பில் கடந்த வெள்ளி அன்று மலையாளத்தில் 'உண்ட' என்கிற படம் வெளியானது. காலித் ரஹ்மான் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மம்முட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வட மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் பணிக்கு செல்லும் கேரள போலீசார், அங்குள்ள மாவோயிஸ்டுகள் மூலம் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை.
இந்த வருடத்திலேயே வெளியான மம்முட்டியின் படங்களில் இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரபு நாடுகளில் இன்று(ஜூன் 18) இந்தப் படம் வெளியாகி உள்ளது. பொதுவாக அரபு நாடுகளில் மலையாள படங்கள் வெளியானாலும் சவுதி அரேபியாவில் மட்டும் படங்கள் வெளியாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மோகன்லாலின் லூசிபர் படம் முதல் மலையாள படமாக சவுதி அரேபியாவில் வெளியானது.. அதைத் தொடர்ந்து தற்போது மம்முட்டியின் முதல் படமாக 'உண்ட' படமும் சவுதி அரேபியாவில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.