Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு ஒரு அடார் லவ் ஹீரோ பதிலடி

18 ஜூன், 2019 - 16:38 IST
எழுத்தின் அளவு:
Roshan-reply-to--Ordu-Adaar-love-director

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளம் மற்றும் தமிழில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய படம் ஒரு அடார் லவ். இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் தனது புருவ சிமிட்டல்கள் மூலம் தானும் பிரபலமாகி இந்த படத்தையும் பிரபலமாக்கியிருந்தார் இதில் நடித்திருந்த புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர். நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாயும் என்பதுபோல பிரியாவுக்கு ஜோடியாக நடித்த நாயகன் ரோஷனும் இந்த படத்தின் மூலம் பிரபலமானார். இயக்குனர் ஒமர் லுலு இயக்கிய இந்தப் படம் இவ்வளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி நாளும் மோசமான திரைக்கதையால் படுதோல்வியை சந்தித்தது.

ஆனாலும் பிரியா பிரகாஷ் வாரியருக்கு இந்தியில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இன்னொரு பக்கம் இந்த படம் தோல்வியை தழுவியதும் பிரியா பிரகாஷ் வாரியருக்கு மட்டுமல்ல, படத்தின் ஹீரோ ரோஷனுக்கும் தலைக்கணம் அதிகமாகி விட்டது என்றும், அதன் பிறகு அவர்கள் தன்னை இயக்குனராக மதிக்கவே இல்லை என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் குற்றம்சாட்டி இருந்தார் இயக்குனர் ஒமர் லுலு.

இதுகுறித்து சமீபத்தில் நாயகன் ரோஷனிடம் கேட்கப்பட்டபோது, “நான் எப்போதுமே இயக்குனர் ஒமர் லுலுவை பற்றி தவறாக பேசியதும் இல்லை.. அவரிடம் மரியாதையை குறைவாக நடந்து கொண்டதும் இல்லை.. ஆனால் அந்த பேட்டியில் அவர் சொல்லித்தான் என்னைப் பற்றி அவர் அப்படி தவறாக நினைத்து கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியவந்தது.. அதற்கு நான் என்ன செய்ய முடியும்..” என பதில் கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் முன்பாகவே ரசிகர்களை கடிந்து கொண்ட கேரள முதல்வர்மோகன்லால் முன்பாகவே ரசிகர்களை ... மோகன்லால் பட இயக்குனர் மீது வழக்கு பதிவு மோகன்லால் பட இயக்குனர் மீது வழக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in