Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் முன்பாகவே ரசிகர்களை கடிந்து கொண்ட கேரள முதல்வர்

18 ஜூன், 2019 - 16:36 IST
எழுத்தின் அளவு:
Pinarayi-upset-over-cheer-for-Mohanlal

கேரள முதல்வர் பினராயி விஜயன், சினிமாவில் அவ்வளவாக நாட்டம் இல்லாதவர் என்றாலும், தங்கள் அரசு செயல்படுத்தும் சில புதிய திட்டங்களை திரையுலக பிரபலங்கள் மூலம் பிரபலப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதவர். அந்தவகையில் மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து சில திட்டங்களை விளம்பரப்படுத்தி வருகிறார். அப்படித்தான் சமீபத்தில் பாலக்காட்டில் உள்ள ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் பினராயி விஜயனும், மோகன்லாலும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

விழா துவங்கும் முன்பு வரை மோகன்லாலுடன் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தார் முதல்வர் பினராயி விஜயன். அதன்பிறகு அவரை பேசுவதற்காக மேடையில் அழைக்க, அவர் பேச ஆரம்பித்ததிலிருந்தே மோகன்லால் ரசிகர்கள் அவரைப் பேசவிடாமல் கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். இது முதல்வரின் முகத்தில் எரிச்சலை உண்டாக்கியது அப்பட்டமாக வெளியே தெரிந்தது.

அந்த மேடையிலேயே இதுகுறித்து சுட்டிக்காட்டிய முதல்வர், ரசிகர்கள் நடிகர்களை புகழ்ந்து கொண்டாடுவதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள்.. ஆனால் அவர்களையும் தாண்டி வெளியே உண்மையான ஒரு உலகம் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை என்று விமர்சித்தார். அதன் பின்பே ரசிகர்கள் சத்தம் அடங்கியது. அதன்பிறகு பேச வந்த மோகன்லாலும் ரசிகர்கள் சத்தம் போட்டது குறித்தோ, அதற்கு கேரள முதல்வர் விமர்சனம் செய்ததை குறித்தோ பேசாமல் நிகழ்ச்சி குறித்து மட்டுமே பேசி மேலும் சர்ச்சை கிளம்பாமல் பார்த்துக்கொண்டார்

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நான்கு வெற்றி : நன்றி சொன்ன மம்முட்டிநான்கு வெற்றி : நன்றி சொன்ன மம்முட்டி அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு ஒரு அடார் லவ் ஹீரோ பதிலடி அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு ஒரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

nicolethomson - bengalooru,இந்தியா
19 ஜூன், 2019 - 04:45 Report Abuse
 nicolethomson பினராயி கேரளாவில் கம்யூனிசத்துக்கு சமாதி கட்டாம கிளம்ப போவதில்லை போல?
Rate this:
Allah Daniel - SACRAMENTO,யூ.எஸ்.ஏ
18 ஜூன், 2019 - 21:26 Report Abuse
Allah Daniel பிரணாய் அவர்களே..எப்போது தர்காவில் பெண்களை அனுமதிக்க போகுறீர்கள்? இப்போது ஒரு பெண் சர்ச் பிஷப் ஆகமுடியும்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in