Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரை பக்கெட் தண்ணீருக்கு அரை மணிநேரம் காத்திருப்பு : எஸ்பிபி., வேதனை

18 ஜூன், 2019 - 16:12 IST
எழுத்தின் அளவு:
Water-issue-:-SPB-advice

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் கூர்கா. சான் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்தின் ஆடியோ விழா இன்று(ஜூன் 18) காலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகர் சித்தார்த் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கெண்டனர்.

இந்த விழாவில் எஸ்.பி.பி.பேசுகையில், படக் குழுவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து சமூக அக்கறையுடன் பேசத்தொடங்கினார். மனிதன் குரங்கில் இருந்து வந்தவன். ஆனால் குரங்குகள் தங்களது கடமையை சரியாக செய்து வரும் நிலையில் மனிதன் தான் செய்வதில்லை. குறிப்பாக தண்ணீரை சரியான முறையில் சேமித்து வைக்காததால் இன்றைக்கு குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறோம்.

இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு முன்பு அரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணி நேரம் காத்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிற எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதை யாரும் வீணடித்து விடாதீர்கள்.

அதோடு வீட்டில் தட்டில் சாப்பிடுவதற்கு பதிலாக இலையில் சாப்பிடலாம். தினமும் ஒரு டிரஸ் போடாமல் வாரம் இரண்டு என போட்டால் துணி துவைப்பதற்கான தண்ணீர் செலவு குறையும். அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய சொத்து என்றால் அது இந்த தண்ணீர்தான். அதனால் அனைவரும் தண்ணீரை சேமித்து வைத்து சிக்கனமாக செலவு செய்யுங்கள் என்று பேசினார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
அரவிந்த்சாமியின் புலனாய்வுஅரவிந்த்சாமியின் புலனாய்வு ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம் ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Raj - coimbatore,இந்தியா
22 ஜூன், 2019 - 06:19 Report Abuse
Raj சென்னையில் ஆண்டாண்டுகாலமாக தெலுகு பேசும் மக்கள் அதிகம் வசித்தார்கள் என்பது உண்மை. நீங்க எப்போ சென்னைக்கு வந்திங்க ? உங்களுக்கு சென்னப்ப நாயக்கரை பத்தி தெரியுமா? மனிதன் உடலில் எழுபது சதவிகிதம் தண்ணீர், தமிழ் பேசுபவருக்கு மட்டும் தான் தண்ணீர் கொடுப்பீர்களா ? மனிதனை மனிதனாக பார்க்கும் பக்குவம் வேண்டும். அன்பே சிவம்.
Rate this:
P S Balaji - Mumbai,இந்தியா
20 ஜூன், 2019 - 09:40 Report Abuse
P S Balaji நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. - திருவள்ளுவர். இந்த உலகம் நீரினால் உருவாக்கப்பட்டது. நாம் நீரினை நமது தெய்வம் போல் மதிப்பு அளிக்க வேண்டும்.
Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20 ஜூன், 2019 - 06:16 Report Abuse
D.Ambujavalli இந்தப் பதிவின் நகலை அமைச்சர் முதல்வருக்கு அனுப்பலாம். இப்படி செலிப்ரிட்டி வாயால் ஒரு விமர்சனம் வந்து அவர்களின் அறிக்கையைக் கவிழ்த்து விட்டதே அரை பக்கெட் தண்ணீர் ஒருவேளை முகம் கழுவ வேண்டியிருந்திருக்கலாம். அல்லது வேறு உபயோகத்துக்கு இருந்திருக்கும். குளிக்க என்று அவர் சொன்னாரா?
Rate this:
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
20 ஜூன், 2019 - 02:34 Report Abuse
C.Jeyabalan தண்ணீரை சேமிக்க ஒரே வழி, கோடி கணக்கில் மக்கள் ஒரே இடத்தில் கூடி வாழக்கூடாது. அப்படியே வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படடாலும், நீர்நிலைகளை அழித்து, அவற்றில் குடியிருக்க வீடுகள் கட்டிட கூடாது. ஒவ்வொரு வீடு / அடுக்குமாடி கட்டிடத்தை சுற்றியும், குறிப்பிடட அளவு நிலம் மழைநீரை குடிக்கும் பொருட்டு வெற்றிடமாக / காலியாக விட வேண்டும். மழைநீர் கடலில் போய் சேராமல் குளம்/ஏரிகள் அமைத்தல் வேண்டும் இருக்கின்ற ஏரி / குளங்கள் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார பட வேண்டும். மழை நீர் சாக்கடையில் கலக்க விடக்கூடாது. அனைத்திற்கும் மேலாக, அரசில் பணியாற்றுபவர்கள் லஞ்சம் வாங்க கூடாது பொதுமக்களும் லஞ்சமே கொடுக்கக்கூடாது. இப்படி செய்தால் மழை தானே பொழியும். பின்னர், தண்ணீர் பஞ்சம் எப்படி வரும்?
Rate this:
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
19 ஜூன், 2019 - 19:58 Report Abuse
 Muruga Vel மினரல் வாட்டர் பாட்டில் வாங்கி அதிலேயே குளிக்கும் அளவுக்கு வசதி படைத்தவர் சொல்வது நம்பும்படி இல்லை ...
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in