Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்ஜிஆர்., கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் : ஐகோர்ட் அனுமதி மறுப்பு

18 ஜூன், 2019 - 15:03 IST
எழுத்தின் அளவு:
HC-deny-to-conduct-nadigar-election-at-Chennai-MGR-Janaki-college

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 23ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. சென்னை அடையாறு எம்ஜிஆர்., - ஜானகி கல்லூரியில் நடக்கும் இந்த தேர்தலில், விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ்சாமிகள் அணியும் மோதுகின்றன. தேர்தல் நடைபெறும் நாளன்று போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தற்போதைய சங்க செயலாளர் விஷால், போலீஸ் கமிஷனரிடத்தில் மனு அளித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு தேர்தல் நடத்த வேண்டாம், வேறு இடத்தில் நடத்தும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதை நடிகர் சங்க நிர்வாகிகள் ஏற்காததால் பாதுகாப்பு தர இயலாது என்று போலீஸ் கூறிவிட்டனர். நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் விஷால் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூன் 17) வந்தது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது. நடிகர் சங்க தேர்தல் பற்றி கவலையில்லை, பொது மக்களின் பாதுகாப்பே முக்கியம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வேறு இடத்தில் நடத்திக் கொள்ளுங்கள். வேறு இடம் குறித்து நாளை தெரிவிக்கும் படி உத்தரவிட்டது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்க தேர்தலை நிறுத்த சதி  - பாண்டவர் அணிநடிகர் சங்க தேர்தலை நிறுத்த சதி - ... நோயாளி போல் கீர்த்தி சுரேஷ் : ஸ்ரீரெட்டி வம்பு நோயாளி போல் கீர்த்தி சுரேஷ் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

meenakshisundaram - bangalore,இந்தியா
19 ஜூன், 2019 - 04:29 Report Abuse
meenakshisundaram பேசாமே மெரினாவில் நடத்திட லாமே அது ரொம்ப ராசியான இடம்,சமாதிகளும் உண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஜெய்த்ததே
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18 ஜூன், 2019 - 16:04 Report Abuse
J.V. Iyer அப்படி போடுங்க இவிங்க எதோ மடத்தனமான தேர்தல் நடத்துவாய்ங்களாம். இதற்கு போலீஸ் பாதுகாப்பு.. சேச்சே..தமிழ் சினிமா அழித்துக்கொண்டு இருக்கிறது. விஷால் குழுவுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
அருண்நம்பி - Chennai,இந்தியா
18 ஜூன், 2019 - 15:35 Report Abuse
அருண்நம்பி சினிமாக்காரனுங்களுக்கு தேவையா குட்டு, நன்றி நீதி அரசரே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in