ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா | அசீமிற்கு விருந்து கொடுத்த வனிதா | என் மீது பொய்வழக்கு : நித்யா பேட்டி |
ஹாலிவுட்டில் பாணியில் உருவாகி உள்ள படம் தும்பா. சுரேகா நியாபதி தயாரித்துள்ளார். தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளார். அனிருத் ஒரு பாடலுக்கு இசை அமைத்துள்ளார். நரேஷ் இளன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஹரிஷ் ராம் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதுபற்றி தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறியதாவது: இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜெயம் ரவி நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற ஒப்புக் கொண்டது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தை சர்ப்ரைஸாக வைக்க விரும்புகிறோம், அது ஒரு சிறப்பு தோற்றம் தான் என்றாலும் பார்வையாளர்கள் அவர் வரும் காட்சிகளை மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறோம். என்றார்.