Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பல பெண்களை சீரழித்தவர் விஷால் : தேர்தல் நேரத்தில் கிளம்பிய ஸ்ரீரெட்டி

17 ஜூன், 2019 - 14:01 IST
எழுத்தின் அளவு:
Sri-Reddy-sensational-allegations-against-Vishal

சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு அளிப்பதாகச் சொல்லி, தன்னை படுக்கைக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என, தெலுங்கு முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதெல்லாம் புகார் கூறினார் நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னுடைய குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, தெலுங்கு நடிகர் சங்கம் முன், அரை நிர்வாணம் போராட்டமும் நடத்தினார்.

அதன் பின், தமிழ் திரைப்பட உலகம் பக்கம் திரும்பினார். இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் என எல்லோருமே, எனக்கு வாய்ப்புத் தருவாதச் சொல்லி, என்னை ஏமாற்றினர் என குற்றம்சாட்டினார். இது பரபரப்பாக இருக்கும்போதே, நடிகர் ராகவா லாரன்ஸ், ஸ்ரீ ரெட்டிக்கு தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, கொஞ்சம் அமைதியானார் ஸ்ரீ ரெட்டி. ஆந்திராவின் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கும் குடிபெயர்ந்தார். சென்னை, வளசரவாக்கத்தில் வீடு எடுத்துத் தங்கினார். ஆனால், ராகவா லாரன்ஸ் இன்னமும் அவருக்கு எந்த பட வாய்ப்பையும் வழங்கவில்லை.

சமூக வலைதளங்களில், மக்கள் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது தகவல் மற்றும் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, சில நடிகர்கள், இயக்குநர்கள் குறித்த தகவல்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழக நடிகர் சங்கத்துக்கு நடக்க இருக்கும் தேர்தலையொட்டி, தற்போது நிர்வாகத் தரப்பாக இருக்கும் நடிகர் விஷால், தனக்கான குரூப்பை மீண்டும் தேர்தலில் போட்டியிட வைத்து, தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில், நடிகர் விஷாலை மிக மிக கடுமையாகவும் கேவலமாகவும் விமர்சித்தும், சவால் விட்டும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. அவர் சொல்லியிருக்கும் கருத்துக்களில் பல வெளியில் அப்பட்டமாக பேச முடியாதவை.

அந்த கருத்துக்களை நீக்கி விட்டு, அவர் சொல்லியிருக்கும் கருத்துக்களை மட்டும் இங்கே : விஷால் அவர்களே நீங்கள் எத்தனை பெண்களை ஏமாற்றி, சூறையாடி இருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்குத் தெரியும். அப்படி இல்லை என்றால், நீங்கள் அதை நிரூபிக்க முடியுமா? நான் சொல்லுவதை என்னால் நிரூபிக்க இயலும்.

விஷால் மீண்டும் தனக்கு ஓட்டுக் கேட்டு, ஒவ்வொருவர் முன்பும் வந்து நிற்கிறார். அவருக்கு ஓட்டளிப்பதற்கு முன், அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் மிகப் பெரிய ஏமாற்றுவாதி. அதை நான் என் அம்மாவின் மீதும்; என்னுடைய தொழிலின் மீதும் சத்தியம் செய்து கூறுகிறேன்.

விஷால் படங்களில் நடிக்க வேண்டும் என்றால், எந்தப் பெண்ணும் அவரோடு படுத்துத்தான் ஆக வேண்டும். இதை இன்றும் சொல்வேன்; என்றும் சொல்வேன். எங்கு வந்து வேண்டுமானும் சொல்வேன். என்னை அழித்தாலும் சரி... அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். உங்களிடம் படுக்கையை பகிர்ந்த பெண்கள் அனைவரும் இன்று நல்ல நிலையில்தான் உள்ளனர். உங்களுக்கு பெண்களை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கென்றே, ஒரு குரூப்பை நீங்கள் வைத்துள்ளதும் எனக்கு நன்கு தெரியும். அவர்கள் யார் யார் என்பதும் எனக்குத் தெரியும். இனியும், உங்கள் கோர முகத்தை நீங்கள் மறைத்து வைத்துக் கொண்டு, எல்லோரையும் ஏமாற்ற முடியாது.

இவ்வாறு, ஸ்ரீ ரெட்டி தன்னுடைய பதிவில் கூறியிருக்கிறார்.

இன்னும் ஒரு வாரத்தில் நடிகர் சங்கத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், நடிகை ஸ்ரீ ரெட்டி இப்படியெல்லாம், நடிகர் விஷாலை அசிங்கப்படுத்தும்படி கூறியிருப்பது, விஷால் தரப்பிற்கு எதிரானவர்கள் துண்டுதலாலேயே இதெல்லாம் நடப்பதாக கூறுகின்றனர். இதை எப்படி எதிர்கொள்வது என புரியாமல், விஷால் தரப்பினர் தடுமாறுவதாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
தமிழிசை மீதான விமர்சனம் : மன்னிப்பு கேட்ட நிஷாதமிழிசை மீதான விமர்சனம் : மன்னிப்பு ... நடிகர் சங்க தேர்தல் : பாதுகாப்பு கோரி விஷால் கோர்ட்டில் முறையீடு நடிகர் சங்க தேர்தல் : பாதுகாப்பு கோரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

siriyaar - avinashi,இந்தியா
18 ஜூன், 2019 - 21:30 Report Abuse
siriyaar அயோக்கியத்தனம் இவன் தொழில். இவன் தமிழ்நட்டில் ஜெயிப்பான்.
Rate this:
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
18 ஜூன், 2019 - 11:21 Report Abuse
D. Selestine Arputharaj இவள் எல்லா நடிகரையும் மட்டும் இல்லாமல் நடிகைகளையும் வாய்க்கு வந்த படி பேசுறா .. எல்லா நடிகருடனும் படுத்ததாக சொல்றா .. இவளை ஏன் விபசாரம் பண்ணின சட்டத்தில் உள்ள போடா முடியாது....இவ்ளோ ஓப்பனா சொல்றா.. எல்லா குற்றத்தையும் ஒத்துக்கற...இவளை ஏன் குண்டர் சட்டத்துல உள்ள போடா முடியாது.. ஒரு சைக்கோ மாதிரி பேசுறா....
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
18 ஜூன், 2019 - 09:23 Report Abuse
Matt P ..இவன் இல்லா விட்டால் இன்னொருத்தன் - படுக்க விரும்பாதவன் theta போக வேண்டியது thane.. காலம் எவ்வளவோ மாறி விட்டது .. பெண் நடிகைகளுக்கு அந்த காலத்தை வீட்டா எவ்வளவோ பாதுகாப்பு இருக்கிறது .. . சினெம்மாவிலே நடிச்சு தான் ஆக வென்றும் என்று என்ன கட்டாயம் . மீசைக்கு ஆசை கூழுக்கும் ஆசை ..அவனுகளும் என்ன செய்வானுக ...அவனவன் பாத்தவுடன் பரவசமடைஞ்சு ...தனையையே மறந்திரானுக. நல்ல மேக் உப்பு போட்டுட்டு அவனுக முன்னால பொய் நின்னு அங்க தொட்டு இங்க தொட்டு முத்தம் கொடுத்து நடிச்சா எல்லோரும் உணர்ச்சி வசப்படுவது இயற்க்கை தான் .. உங்களை மாதிரி ஒழுக்கமான பொண்ணுங்க வேற நல்ல தொழிலுக்கு போவது தான் நல்லது ...பாட்டு எழுதுவனுக்கே ஆசையை அடக்க முடியல,,,விருப்பத்துக்கு விரோதமா கையை புடிச்சு இழுத்தானா ? ..சொல்லு ….சிலையை பாத்தவுடனே ஒருத்தன் avania மறந்திருக்கான் ..செய்தியை படிச்சிகளா? ..உயிரோவியதை பாத்தா விட்டுவானுகள்ஆஅ? ...
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18 ஜூன், 2019 - 06:08 Report Abuse
Mani . V போகிற போக்கை பார்த்தால் ஸ்ரீரெட்டி இந்தியாவில் இருக்கும் வயதுக்கு வந்த அனைத்து ஆண்களும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று சொன்னாலும் சொல்வார் போலயிருக்கே?
Rate this:
Kumar - Chennai,இந்தியா
18 ஜூன், 2019 - 04:31 Report Abuse
Kumar எது பலாத்காரம் என்பதும் என்பது சம்மதம் என்பதும் எது தூண்டபட்டது என்பதற்கான எல்லை கோடுகள் இந்த விஷயத்தில் தெளிவாக வரைவது மிக கடினம். என்ன இருந்தாலும் விஷாலினால் உண்மையிலேயே பெண்கள் எவரேனும் பாதிக்கபட்டிருந்தால் அது கண்டனத்திற்குரிய விஷயம்தான். எல்லோரும் நடிகர் சிவகுமார் போல பிள்ளைகளை வளர்ப்பதும் இல்லை எல்லா பிள்ளைகளும் சூர்யா கார்த்திக் போல கண்ணியமாக இருக்க விரும்புவதும் இல்லை. யாரும் பாதிப்படையாமல் இருக்கும் வரை இந்த விஷயத்தை இழுப்பது தேவை இல்லாத விஷயம். Me Too வை பற்றி கேட்கும் பொது மழுப்பும் ஆட்கள் மீதும் அதை முற்றிலும் தவறு என்று சொல்லும் ஆட்கள் மீதும் ( ஆணாக இருந்தாலும் , பெண்ணாக இருந்தாலும் சரி) சந்தேகம் வரத்தான் செய்கிறது. தான் தவறு செய்திருந்தாலும், அதை தவறு என்று உணர்ந்து அதை தவறு என்று வெளிப்படையாக சொல்ல கூட சிலருக்கு நேர்மையும் தைரியமும் தன்னலமற்ற பொதுநலமும் வருவதில்லை. பல சினிமா பிரபலங்கள் ( ஆண் பெண் உட்பட) இதில் அடக்கம். அவர்கள் பேட்டிகளை பார்த்தால் இது சூசகமாக விளங்கும்.
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in