Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வளைகாப்பு: நெகிழும் சுஜா

17 ஜூன், 2019 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Suja-Varunee-shares-about-baby-shower-function

சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகை சுஜா வருணி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலம் ஆனார். இந்த நிகழ்ச்சிக்குப் பின், சில திரைப்படங்களில் நடிக்க முயற்சித்தார். ஆனால் அவர் தன்னுடைய காதலர் சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார். சிவக்குமார் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதால், அவர் சின்னத் திரையிலோ; வெள்ளித் திரையிலோ தோன்றுவதை முழுவதுமாக நிறுத்தி விட்டு, குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தத் துவங்கினார்.

இந்நிலையில், அவர் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை, கடந்த சில மாதங்களுக்கு முன், டுவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்து, சில புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். தற்போது, தனக்கு குடும்பத்தினர் நடத்தி வைத்த வளைகாப்பு நிகழ்ச்சித் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு, இந்த நிகழ்ச்சியை நடத்திய சிவக்குமார் குறித்து நெகிழ்ச்சியாக சில விஷயங்களைக் கூறியிருக்கிறார்.

அதில், சிவக்குமார் எனக்கு கணவராக கிடைத்ததற்கு நான் வரம் பெற்றிருக்க வேண்டும். இப்படியொரு பிரம்மாண்டமான வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துவார் என நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என, சுஜா வருணி பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதியின் மலையாள பட ரிலீஸ் தேதி அறிவிப்புவிஜய் சேதுபதியின் மலையாள பட ரிலீஸ் ... தமிழிசை மீதான விமர்சனம் : மன்னிப்பு கேட்ட நிஷா தமிழிசை மீதான விமர்சனம் : மன்னிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 ஜூன், 2019 - 18:07 Report Abuse
Vasudevan Srinivasan சுஜாவாருணி அவர்கள் நடிகர்திலக குடும்ப மருமகள் என்பதை குறிப்பிட மறந்து விட்டீரே..
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 ஜூன், 2019 - 18:06 Report Abuse
Vasudevan Srinivasan நடிகர்திலகம் மீண்டும் பிறந்து வரட்டும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in