Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கேரளாவை உலுக்கிய 2 நிகழ்வுகள் சினிமாவானது

17 ஜூன், 2019 - 13:03 IST
எழுத்தின் அளவு:
2-incidents-made-as-movie-in-Malayalam

பொதுவாக வரலாற்று நிகழ்வுகள், மிகவும் அசாதாரணமான கொலை கொள்ளை சம்பவங்கள் ஆகியவற்றை அவை நடந்து பல வருடங்கள் கழிந்த பின்னரே சினிமாவாக எடுப்பது வழக்கம். ஆனால் கடந்த வருடம் கேரளாவை உலுக்கிப்போட்ட 2 பயங்கர நிகழ்வுகளையும் இந்த வருடம் சினிமாவாக எடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர் மலையாள திரையுலகில்.

கடந்த வருடம் மார்ச்சில் இருந்து ஜூன் மாதம் வரை கேரளாவை அச்சுறுத்தியது நிபா வைரஸ் தாக்குதல். இதை அடிப்படையாக வைத்து சமீபத்தில் பார்வதி, டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் வைரஸ் என்கிற படம் வெளியானது.. பிரபல இயக்குனர் ஆசிக் அபு இந்தப்படத்தை இயக்கி இருந்தார்.

இதேபோல கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கேரளாவில் மக்களின் மேல் அடுத்த இடியாக இறங்கியது எதிர்பாராமல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.. பல வருடங்களாக கேரளாவில் அதுவரை பார்த்திராத மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்த இந்த வெள்ளம் மற்றும் அது தொடர்பாக நடந்த நிகழ்வுகளையும் 'ரௌத்திரம் 2018' என்கிற பெயரில் படமாக இயக்கி உள்ளார் இயக்குனர் ஜெயராஜ்.. இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டு ஹீரோ கதையாக உருவாகும் லூசிபர் 2இரண்டு ஹீரோ கதையாக உருவாகும் ... நான்கு வெற்றி : நன்றி சொன்ன மம்முட்டி நான்கு வெற்றி : நன்றி சொன்ன மம்முட்டி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in