Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகள் சம்மதத்துடன் மறுமணம் செய்தேன்: பிரகாஷ்ராஜ்

17 ஜூன், 2019 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Prakash-raj-replied-why-he-married-Pony-Verma

நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதா குமாரியை திருமணம் செய்திருந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு போனி வர்மா என்ற டான்ஸ் மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்தேன் என்கிறார் பிரகாஷ்ராஜ். இதுப்பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது :

எனக்கு 4 குழந்தைகள். அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. குழந்தைகளுக்கு வெளி உலகம் நிறைய கற்று கொடுக்கிறது. அவர்களை இப்படித்தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. குழந்தைகள் பெற்றோர்களை பார்த்து வளர்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு புத்தகம் மாதிரி நாம் இருக்க வேண்டும்.

நான் மீண்டும் திருமணம் செய்தபோது எனது பெரிய மகளுக்கு 14 வயது. என் அப்பா, தங்கை, மகள் 3 பேரையும் உட்கார வைத்து போனி வர்மாவை அழைத்து வந்து இவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும், எனது மகள் சம்மதம் சொன்னாள். ஆனால் எனது அம்மா அழுதுவிட்டார். என் குடும்பத்தில் நிறைய பெண்கள் உள்ளனர். எல்லோருக்கும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது பற்றி விளக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.

என் முதல் மனைவி லலிதாவும், இரண்டாவது மனைவி போனியும் குழந்தைகள் விஷயத்தில் தோழிகளாகி விட்டனர். லலிதாவுக்கு நான் மட்டும் தான் விவாகரத்து கொடுத்தேன். எனது குழந்தைகளும் அம்மாவும் விவாகரத்து கொடுக்கவில்லை.

லலிதாவுக்கும் எனக்கும் பிரச்சினை இருந்தது. பொய்களுடன் சேர்ந்து வாழக்கூடாது என்று பிரிந்து விட்டோம். நான் நேர்மையாக இருக்கிறேன். லலிதாவும் நானும் வெளிப்படையாக பேசி பிரிந்தோம். இதையெல்லாம் பார்த்தே எனது குழந்தைகள் வளர்ந்தனர்.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
சர்வதேச திரைப்பட விழாவில் சர்வம் தாளமயம்சர்வதேச திரைப்பட விழாவில் சர்வம் ... விஜய் மில்டனுடன் இணையும் விஜய் ஆண்டனி விஜய் மில்டனுடன் இணையும் விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

Pannadai Pandian - wuxi,சீனா
23 ஜூன், 2019 - 16:06 Report Abuse
Pannadai Pandian பெண் கிட்ட சம்மதம் வாங்கினானாம்…... நல்லா கேட்டுக்கோங்க நியாயத்தை…..
Rate this:
vidhuran - chennai,இந்தியா
23 ஜூன், 2019 - 12:15 Report Abuse
vidhuran தனிநபர் சுதந்திரம் என்று கூறி இதைப்பற்றியெல்லாம் பொது வெளியில் சொல்லாமல் இருந்து இருக்கலாம் ஆனால் பதினான்கு வயது மகள் சம்மதம் கொடுத்து விட்டால் போதுமா? பிரகாஷ் ராஜ் என்ற தனிமனிதனின் உரிமையை யாரும் தட்டி கேட்க முடியாது ஆனால் அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் (நான் மட்டும் தான் லலிதாகுமாரியை விவாக ரத்து செய்தேன்) என்பதெல்லாம் சினிமா மாதிரியே இருக்கிறது நிஜவாழ்க்கை என்பது அவ்வளவு எளிதா?
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
23 ஜூன், 2019 - 10:29 Report Abuse
Swaminathan Chandramouli மகள் சம்மதத்துடன் மறுமணம் செய்து கொண்டேன் . எங்கேயோ இடிக்கிறதே , யாரை மறுமணம் செய்தார் பிரகாஷ்ராஜ் ?
Rate this:
atara - Pune,இந்தியா
22 ஜூன், 2019 - 06:33 Report Abuse
atara Note: Divorce can be Initiated with Parents , Brothers , Sisters. The Law Defenition in India , Divorce is freedom given to other to be in any form how they want to live. public has to comment on Karunanathi late Cinemea artist has married 3 wifes. So Marriage is personal Freedom. Note: public has to understand Divorce can be initiated non acceptance of certain behaviour of a person. When you employee do not like you they Divorce you mean you are asked to quit the job with Settlement amount. Read your Appoinment letter. you have freedom to write Bond will of your money to give to your Next house women or Man or to any person to a Dog , Animial say anything or give your money to government is one freedom. So a Money minded wife , childeren or grand children with fathers earnings or in reverse has freedom to do as they like to sp. So you have your grown kid so in thier salary they have rights to save or sp as they wish. you can only advise to save or give to you. Here the public comments is stupid , no No Lawyer or Judge has rights to present in family court case , so party appeal is granted to petitioner and the respondent has freedom to accept or oppose it. So Law will not enter into personal life and freedom of Individual. So Divorce mean seperation for legal rights and demands. Can be applied between parents and kids , Brothers, Fris also.
Rate this:
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
20 ஜூன், 2019 - 04:10 Report Abuse
C.Jeyabalan தவறு செய்து விட்டு, அதையும் ஒரு யோக்கியத்தனம் போல நடிக்கும், இவன் ஒரு நடிகன் கேட்டால், நடிகனின் எவன் யோக்கியன் என்பார்கள்
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in