Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

30 வருடங்களை முடித்த கரகாட்டக்காரன்

16 ஜூன், 2019 - 12:31 IST
எழுத்தின் அளவு:
karakatakkaran-movie-completes-30-years

தமிழ் சினிமாவில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்ற படம் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா மற்றும் பலர் நடித்து இதே நாளில் 30 வருடங்களுக்கு முன்பு 1989ல் வெளிவந்த படம்தான் கரகாட்டக்காரன்.

மாங்குயிலே பூங்குயிலே... என்ற ஒரு பாடலும், கவுண்டமணி, செந்தில் நடித்த வாழைப்பழக் காமெடியும் இந்தப் படத்தை பட்டி, தொட்டி எங்கும் சென்று சேர்த்தன. தமிழ் சினிமாவில் அதற்கு முன் அப்படி ஒரு வரலாற்று வசூல் நடந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு வசூல் சாதனை புரிந்தது.


மதுரையில் மட்டும் ஒரு தியேட்டரில் ஒரு வடத்திற்கும் மேல் ஓடிய படம். பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. அந்தக் காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடித்த படங்கள் செய்யாத சாதனையைக் கூட ராமராஜன் செய்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 80களின் இறுதியிலும், 90களின் துவக்கத்திலும் ராமராஜன் பல வசூல் படங்களைக் கொடுத்த ஒரு நடிகர்.


நம் மண்ணின் வாழ்க்கை முறையை கிராமியக் கலைகளைப் பற்றிய ஒரு படத்தை உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தப் படத்தை எத்தனை ஆண்டு காலத்திற்கும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'தர்பார்' படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் நிறைவு'தர்பார்' படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் ... முதன்முதலாக போலீஸ் வேடத்தில் ஷ்ரத்தா கபூர் முதன்முதலாக போலீஸ் வேடத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
18 ஜூன், 2019 - 18:45 Report Abuse
Vasudevan Srinivasan என்னதான் உழைப்பு என்றாலும் நேரம் (அதிர்ஷ்டம்) என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதற்கு திரு. ராமராஜன் அவர்களின் திரையுலக வாழ்க்கையும் ஒரு உதாரணம்.. ஒன்று இரண்டல்ல சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை கொடுத்த ராமராஜன் அவர்கள் நிலை முற்றிலும் மாறியது வருத்தம் தரும் விஷயம்தான்..
Rate this:
17 ஜூன், 2019 - 12:18 Report Abuse
கதை சொல்லி இவ்வளவு சொன்ன நீங்கள், தில்லானா மோகனாம்பாளின் உல்டாவை பற்றி சொல்லாமலிருந்தது ஏனோ
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
16 ஜூன், 2019 - 14:35 Report Abuse
Bhaskaran அந்த ராமராசன் பெண் மோகத்தினால், அரசியலால் வீணாக போனார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in