Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காமோஷி பட கேரக்டர் ரொம்பவும் சவாலானது: தமன்னா

16 ஜூன், 2019 - 11:29 IST
எழுத்தின் அளவு:
tamanna-on-khamoshi-movie-character

நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா இயக்கத்தில் கமோஷி என்ற இந்திப் படத்தில் நடித்ததை பெருமையாக கருதுவதாக நடிகை தமன்னா கூறியிருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


காமோஷி படத்தின் கதையைக் கூறி, அதில் காது கேட்காத-வாய் பேச முடியாத ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். முதலில் அதென்ன பிரமாதம் என நடிக்க ஒப்புக் கொண்டேன். அதன் பின், படபிடிப்புத் தளத்துக்குச் சென்று, அப்படியொரு கேரக்டரில் நடிக்கும்போதுதான், அது எவ்வளவு சவாலானது என்பதை உனர்ந்து கொண்டேன். படபிடிப்பு நடக்கும்போது, அந்த கேரக்டரில் நடிக்கும் என்னுடைய நடிப்பு எவ்வளவு தூரம் ஒரிஜினல் போலவே இருக்கிறது என்பதை சோதித்து அறிவதற்கென்றே படபிடிப்புத் தளத்தில் ஒருவர் இருப்பார். அவர் நடிப்பு முழுவதையும் பார்த்து விட்டு ஓகே சொன்ன பின் தான், அடுத்த காட்சிக்கே போக முடியும். அப்படியொரு நம்பகத்தன்மையோடு காட்சிகள் படமாக்கப்பட்டன. துவக்கத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. போகப் போக, அந்த சவாலான கேரக்டரில் நடிக்க எனக்கே பிடித்து போனது. அப்படிப்பட்ட எந்த சவாலான கேரக்டர் இனி எனக்கு வந்தாலும், அதில் தயக்கமில்லாமல் ஏற்பேன்.


சினிமாவில் எனக்கு ஸ்ருதி ஹாசன் மிக நெருங்கிய தோழி. இருவரும் சந்தித்துக் கொண்டால், சினிமா குறித்து ஒரு வரி கூட பேச மாட்டோம். வாழ்க்கையைத்தான் பேசுவோம். தனுஷ், ராணா, காஜல் அகர்வால் என, சினிமாவில் எனக்கு நிறைய தோழிகளும்; நண்பர்களும் உண்டு. இதில் ராணா மிக மிக நல்லவர். எல்லோருக்கும் உதவிடம் எண்ணம் அவருக்கு இயற்கையிலேயே வாய்த்திருக்கிறது.


இவ்வாறு அவர் பேட்டியளித்திருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ஆப்ரகாம்வேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ... காஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா அத்வானி காஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in