Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாலியல் தொல்லை புகார் : திமிரு நடிகர் மீது வழக்குப்பதிவு

15 ஜூன், 2019 - 17:51 IST
எழுத்தின் அளவு:
Case-file-against-actor-Vinayakan

நடிகர் விஷால், ஸ்ரேயா ரெட்டி, ரீமா சென் உள்ளிட்ட பலரும் நடித்தப் படம் திமிரு. இந்தப் படம் தவிர, மரியான், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தவர் மலையாள நடிகர் விநாயகன். இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பில் எல்லோரையும் கவரக் கூடியவர்.

இவர் மீது, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும்; மாடலுமான மிருதுளா தேவி என்பவர், கேரளாவின் கல்பட்டு காவல் நிலையத்தில், பாலியல் குற்றச்சாட்டுக் கூறி புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரை அடுத்து, விநாயகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மிருதுளா தேவி, போலீசில் கொடுத்திருக்கும் புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் விநாயகன் சமூக விஷயங்களில் ஆர்வமுடையவர் என்பதால், அவரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்க முடிவெடுத்து, அவரிடம் பேசி ஒப்புதல் பெற்றோம். பின், நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதற்காக, அவரது வீட்டுக்கு நானும், என்னுடைய அம்மாவும் சென்றோம். அப்போதுதான், அவரது கோர முகம் வெளிப்பட்டது. என்னிடமும், அம்மாவிடமும் அவர் படு ஆபாசமாகப் பேசி, பாலியில் ரீதியில் எங்கள் இருவரையும் அவருக்கு உடன் பட வலியுறுத்தினார். இது எங்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டிருக்கிறது.

இதையடுத்தே, போலீசார் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாகுபலியையும், மாமாங்கத்தையும் ஒப்பிட வேண்டாம் : மம்முட்டிபாகுபலியையும், மாமாங்கத்தையும் ... ஜெயசூர்யாவை விடாது துரத்தும் சத்யன் ஜெயசூர்யாவை விடாது துரத்தும் சத்யன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
16 ஜூன், 2019 - 06:32 Report Abuse
Mani . V ஆமா, இது எத்தனை வருடத்துக்கு முன்பு நடந்தது? அம்மாவும், மகளும் இவ்வளவு காலம் என்ன செய்தார்கள்? ஓ, இப்பொழுது பணத்தேவை அதிகம் வந்து விட்டதா அப்படியென்றால் வழக்கு போட்டு நன்கு "கறந்து" விட வேண்டியதுதான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in