ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தானா, தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து மிகப் பெரும் புகழைப் பெற்றார். அவரைத் தேடி தெலுங்கில் பல வாய்ப்புகள் வந்தாலும் தேர்வு செய்துதான் நடித்து வருகிறார்.
தமிழில் கார்த்தி நடிக்க உள்ள ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்திலும் நாயகியாக ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்தார்களாம். ஆனால், படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றதும், தற்போது படத்தை வேண்டாமென சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கத்தான் தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் வேண்டமென்றாராம். இப்போது சிவகார்த்திகேயன் படத்தில் கதாபாத்திரம் சரியில்லை என்றதும், மீண்டும் மகேஷ் பாபு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் என்கிறார்கள்.