Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சாஹோ' டீசரின் அதிரடி சாதனை

15 ஜூன், 2019 - 15:50 IST
எழுத்தின் அளவு:
Saaho-teaser-made-record

தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித் ஆகியோரை இனி யு டியூப் கிங், சோஷியல் மீடியா கிங் என்றெல்லாம் சொல்லிக் கொள்ள அவர்களது ரசிகர்கள், வருத்தப்பட வேண்டும். 'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களை மட்டுமல்ல, வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்தவர் பிரபாஸ்.

அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சாஹோ' படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே பெரும் சாதனையைப் படைக்க ஆரம்பித்துவிட்டது.

தற்போது அந்த டீசர் நான்கு மொழிகளிலும் சேர்த்து யு டியூபில் மட்டும் 6 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கில் 2 கோடி, ஹிந்தியில் 3 கோடி, தமிழில் 1.25 கோடி, மலையாளத்தில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

'சாஹோ' டீசர் வெளியான நாளுக்கு ஒரு நாள் முன்னதாக, அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' டிரைலர் வெளியானது. ஆனாலும், நேர் கொண்ட பார்வை டிரைலர் இன்னும் 1 கோடி பார்வையைத் தொடவே திணறிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் 'சாஹோ' டீசர் தமிழில் மட்டும் 1.25 கோடியைக் கடந்திருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

'சாஹோ' படத்தின் வியாபாரம் பரபரப்பாக ஆரம்பமாகி உள்ள நிலையில், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், அதன் தரத்தையும் வெளிப்படுத்தவே அதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே அனைத்து மொழியிலும் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அது பட வியாபாரத்திலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி' வியாபாரத்திற்கு அருகில் 'சாஹோ' வியாபாரம் செல்லும் என்று டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரிலீஸிற்கு தயாராகிறது த்ரிஷாவின் கர்ஜனைரிலீஸிற்கு தயாராகிறது த்ரிஷாவின் ... உலக சாதனையின் அருகில் 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' உலக சாதனையின் அருகில் 'அவெஞ்சர்ஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

manikandan - wilmington,யூ.எஸ்.ஏ
16 ஜூன், 2019 - 06:36 Report Abuse
manikandan எதற்கு எதை ஒப்பிடுவது ,
Rate this:
15 ஜூன், 2019 - 17:23 Report Abuse
Shanmugam , Chennai , saho trailer is paid
Rate this:
kuppu - ,
16 ஜூன், 2019 - 03:57Report Abuse
kuppuintha trailera YouTube la paid promote pannanga,...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
16 ஜூன், 2019 - 08:43Report Abuse
Mirthika Sathiamoorthipaid to who? so what if they paid? each and every movies sp a lots of crores for publicity. even though the trailer is paid, its consider as an advertisement... We know that its very hard to produce a movie....more harder is marketing that movie... They do it for their market...Once the movie become a blockbuster then all your complained vanished in a thin air....we have to appreciate their effort for making the movie and market it well....why do you feel jealousy?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in