175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
சிபிராஜ், காஞ்சனாவாலா, சமுத்திரகனி நடிக்கும் வால்டர் என்ற புதிய படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டது. இதனை பிரபுதிலக் என்பவர் தயாரிக்கிறார். தர்மபிரகாஷ் இசை அமைக்கிறார், ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். அன்பரசன் இயக்குகிறார். பூஜையில் கலைப்புலி தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே வால்டர் படத்தில் விக்ரம் பிரபு, அர்ஜுன் நடிக்க அன்பரசன் இயக்க மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரிப்பதாக ஏற்கெனவே பூஜை போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சிங்காரவேலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வால்டர் படத்தின் கதையும் படத்தின் தலைப்பும் என் வசமே இருக்கிறது .இதே கதையை வேறு நடிகர்களை வைத்து தனது அனுமதி இல்லாமல் தயாரிக்க முற்பட்டால் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட இயக்குனர், தயாரிப்பாளருக்கு நோட்டீசும் அனுப்ப உள்ளார்.