Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா படம் ரிலீசாகவில்லை : காரணம் என்ன?

15 ஜூன், 2019 - 13:07 IST
எழுத்தின் அளவு:
Why-Nayanthara-movie-not-released?

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படம் நேற்று வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் வெளியாகவில்லை. நேற்றைய வெளியீட்டுக்காக தயாரிப்பு தரப்பு பல லட்சத்தில் விளம்பரம் செய்திருந்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதே நயன்தாராவின் சம்பளம் குறித்து தயாரிப்பு தரப்புக்கும், நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பிறகு படத்தின் புரமோசன் நிகழ்ச்சிக்கு படத்திற்கு தொடர்பில்லாத ராதாரவியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது தயாரிப்பு நிறுவனம். அந்த நிகழ்ச்சியில் ராதாரவி நயன்தாராவை கடுமையாக விமர்சிக்க அது பெரும் சர்ச்சை ஆனது.

தயாரிப்பு தரப்பு வேண்டும் என்றே தான் ராதாரவியை அழைத்து பேச வைத்திருப்பதாக கருதிய விக்னேஷ் படம். படத்தை கடுமையாக குறைகூறி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையால் படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. அதோடு நயன்தாராவின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால் படத்தை வாங்கவும் யாரும் முன்வரவில்லை.

படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்னர் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார் விக்னேஷ் சிவன். இதற்கிடையில் கொலையுதிர்காலம் என்ற தலைப்பும், கதையும் எழுத்தாளர் சுஜாதா எழுதியது. அந்த உரிமை என்னிடமே உள்ளது என்று ஒருவர் கடைசி நேரத்தில் வழக்கு தொடர படத்தை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் நேற்று ரிலீசாக வேண்டிய படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக நயன்தாரா இந்தப்படம் குறித்து பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யா படத்தில் ரஜினி நண்பர்சூர்யா படத்தில் ரஜினி நண்பர் வால்டர் படம் : சிங்காரவேலன் எச்சரிக்கை வால்டர் படம் : சிங்காரவேலன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
15 ஜூன், 2019 - 17:31 Report Abuse
Vasudevan Srinivasan சில பேர் வழக்கு போடுவது ஏதோ ஒரு 'வருமானத்திற்காக' என்றே தோன்றுகிறது வேற பொழப்பு இல்லையோ என்னோவோ..?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in