தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! |
தனுஷை வைத்து 'திருடா திருடி' படத்தை இயக்கி, ஆரம்பகாலத்தில் தனுஷூக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைத் தேடிக்கொடுத்தவர் சுப்பிரமணியம் சிவா. அதன் பிறகு ஜீவாவை வைத்து 'பொறி' படத்தை இயக்கியவர், அமீரை கதாநாயகனாக வைத்து 'யோகி' படத்தையும், பிறகு தனுஷ் நடித்த 'சீடன்' படங்களையும் இயக்கினார்.
இந்தப்படங்கள் எதுவும் பெரிய வெற்றியைத் தராத நிலையில் தனுஷ் உடன் ஐக்கியமானார். அவர் நடித்த பல படங்களில் டைரக்ஷன் டிபார்ட்மென்ட்டில் முக்கிய பங்காற்றினார். அதோடு அவரின் ரசிகர் மன்றத்தில் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பல வருட இடைவெளிக்குப் பிறகு 'வெள்ளை யானை' என்ற படத்தை இயக்கியுள்ளார் சுப்பிரமணியம் சிவா.
இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஆத்மியா இணைந்து நடிக்கின்றனர். 'மனங்கொத்தி பறவை' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா. கேரளாவில் இருந்த ஆத்மியா தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையில் செட்டிலானார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை.
அதனால் அப்செட்டில் இருந்த ஆத்மியாவுக்கு ஷாம் நடிக்கும் காவியன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப்படத்தை அடுத்து 'வெள்ளை யானை' பட வாய்ப்பு ஆத்மியாவுக்கு கிடைத்தது. காவியன் படம் எப்போது திரைக்கு வரும் என்று தெரியாத நிலையில் 'வெள்ளை யானை' படத்தை பெரிதாக நம்பியிருக்கிறார் ஆத்மியா.