லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பொருத்தவரை மலையாள திரையுலகை சேர்ந்த மோகன்லால், மம்முட்டி இருவரையும் தனது நடிப்பிற்கான இன்ஸ்பிரேஷன் என எப்போதுமே சொல்லி வருகிறார். இவர்கள் இருவருடனும் இணைந்து நடிக்கும் தனது ஆசையையும் அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளார் ஷாருக்கான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சரியாக இருபது வருடத்திற்கு முன்பு பாசில் இயக்கத்தில் மலையாளத்தில் ஹரிகிருஷ்ணன்ஸ் என்கிற படம் வெளியானது.
மம்முட்டி, மோகன்லால், ஜூஹி சாவ்லா ஆகியோர் நடித்திருந்த இந்தப்படத்தில் கிளைமாக்ஸ் தீர்மானிக்கப்பட்டு அது படமாக்கப்பட்ட பிறகும் அதற்கு பதிலாக இன்னொரு கிளைமாக்ஸ் எடுக்க முடிவு செய்தார் இயக்குனர் பாசில். அந்த கிளைமாக்ஸ்படி தன்னை விரட்டி விரட்டி காதலிக்கும் மோகன்லால், மம்முட்டி இருவரையும் நண்பர்கள் என கூறி ஒதுங்கிக் கொள்ளும் ஜூஹி சாவ்லா, எதிர்பாராத விதமாக இன்னொரு இளைஞனிடம் தனது காதலை வெளிப்படுத்துவார். அந்த இளைஞன் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிப்பதாக இருந்து அதற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டன.
ஆனால் அதன்பின்னர் முதல் க்ளைமாக்சே ஓகே என முடிவு செய்த இயக்குனர் பாசில், ஷாருக்கான் நடித்த கிளைமாக்ஸ் காட்சியை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் வட இந்திய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மம்முட்டியிடம் ஷாருக்கானுடன் இணைந்து எப்போது நடிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மம்முட்டி, “நான் இந்திய அளவில் ஷாருக்கானுடன் மட்டுமல்ல, அந்தப் படத்தில் கூடவே மோகன்லாலுடனும் சேர்ந்து மூவரும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன்.. அது உடனே நடைபெறவில்லை என்றாலும் கூட ஒரு காலத்தில் நடக்கும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறியுள்ளார்