Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் : நடக்குமா நடிகர் சங்க தேர்தல் ?

14 ஜூன், 2019 - 15:47 IST
எழுத்தின் அளவு:
district-registrar-send-show-case-notice-to-nadigar-sangam

தொழில்முறை உறுப்பினர்கள் விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் நடிகர் சங்க தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23 ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாண்டவர் அணி சார்பில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இவர்களை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பாக்யராஜ், பிரசாந்த், ஐசரி கணேஷ், குட்டி பத்மினி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற மூத்த நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர் பாக்யராஜ் அணியினர்.


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மொத்தம் 68 போட்டியிடுவதாகவும், வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (ஜூன் 14) மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கிடையில் நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூன் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை ஐகோர்ட். வழக்கால் தேர்தலுக்கு சிக்கல் வருமோ என்ற கலக்கம் நிலவி வரும் நிலையில், நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.


நடிகர் சங்கத்தில் தொழில்முறை உறுப்பினர்களாக இருந்த 61 பேரை தொழில்முறையற்ற உறுப்பினர்களாக மாற்றியது தொடர்பாக விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் தேர்தல் நடத்துவதற்கான சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் பிறந்த நாளில் அசுரன் டீசர்தனுஷ் பிறந்த நாளில் அசுரன் டீசர் இடம் மாறுகிறதா நடிகர் சங்க தேர்தல்? இடம் மாறுகிறதா நடிகர் சங்க தேர்தல்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mayavan Mayavan - Chennai,இந்தியா
14 ஜூன், 2019 - 18:38 Report Abuse
Mayavan Mayavan தயவு செய்து இந்த மாதிரியான கூத்தாடிகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14 ஜூன், 2019 - 16:20 Report Abuse
A.George Alphonse The heaven is not going to fall if this election is cancelled.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in