Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குநரை அதிர்ச்சியடைய வைத்த விஜய்சேதுபதி

14 ஜூன், 2019 - 14:15 IST
எழுத்தின் அளவு:
vijay-sethupathi-gave-shock-to-director

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.யு.அருண்குமாரும், விஜய்சேதுபதியும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'சிந்துபாத்'. அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில், விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்சேதுபதி, கேஷூவலாக சிந்துபாத் படத்தின் முழுக்கதையையும் சொல்லிவிட்டார். 'சிந்துபாத்' நமக்கு எல்லோருக்கும் தெரிந்த அறிமுகமான கணவன், மனைவி பற்றிய எமோஷனல் படம். ஒருவனுடைய மனைவியை ஒரு கும்பல் கடத்திச் சென்று கடல் கடந்து ஓரிடத்தில் சிறை வைக்கப்படுகிறது. அந்த மனைவியை கணவனானவன் எப்படி கஷ்டப்பட்டு போராடி மீட்கிறார் என்பதுதான் 'சிந்துபாத்' படத்தின் கதை.” என்ற விஜய்சேதுபதி படத்தில் தன்னுடைய கேரக்டர் எப்படிப்பட்டது என்பதையும் போட்டு உடைத்துவிட்டார்.


“இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு காது கொஞ்சம் மந்தமாகத்தான் கேட்கும். எதையும் உரக்கப்பேசினால்தான் அவனுக்குக் கேட்கும். படத்தில் இதுதான் சுவாரஸ்யமான விஷயம்.” என்று அவர் பேசிக்கொண்டேபோக அவருடைய நண்பரான இயக்குநர் அருண்குமார் அதிர்ச்சியில் உறைந்துபோனார். சிந்துபாத் பட வாய்ப்பை அவருக்கு வாங்கிக் கொடுத்ததே விஜய்சேதுபதிதான். அதனால் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாகிவிட்டார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விக்னேஷ் சிவன் வாழ்த்தினால் படம் ஹிட்டாகுமா?விக்னேஷ் சிவன் வாழ்த்தினால் படம் ... தனுஷ் பிறந்த நாளில் அசுரன் டீசர் தனுஷ் பிறந்த நாளில் அசுரன் டீசர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

15 ஜூன், 2019 - 06:47 Report Abuse
Arunachalam இதுவே ஒரு மார்க்கெட்டிங் தான்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
14 ஜூன், 2019 - 16:55 Report Abuse
Vasudevan Srinivasan சொல்லும் விதம் சுவாரஸ்யமாக இருந்துவிட்டால் கதை தெரிந்தாலும் படம் வெற்றிபெறும் அதற்காக கவலைப்படவேண்டியதில்லை..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in