கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
சித்தார்த் நடிப்பில் அடுத்து தயாராகி உள்ள படம் அருவம். இதில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், கபீர் தூஹான் சிங், மதுசூதனராவ், ஸ்டண்ட் சில்வா, ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைக்கிறார், என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். சாய் சேகர் இயக்குகிறார் படம் பற்றி அவர் கூறியதாவது:
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திகில் படம் வெளிவருகிறது. ஆனால் அருவம் இந்த வகை படங்களில் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான களத்தில் அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கும். இது ஆக்ஷன், காதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு திகில் படம். கிராமம் மற்றும் நகரம் என அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்புகிறோம்.
இந்த படத்தின் பேசுபொருள் சமூகத்துடன் தொடர்புடையது. இது பார்வையாளர்களிடையே நல்ல சிந்தனையை உருவாக்கும். அருவம் என்பது உடல் என்பதன் எதிர்ச்சொல். இந்த தலைப்பு படத்தின் மையக் கருத்து இயற்கைக்கு அப்பாற்பட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. என்றார்.
இதில் சித்தார்த்த உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். உணவு பொருளில் கலப்படம் செய்யும் மிகப்பெரிய நெட்ஒர்க்கை எதிர்த்து அவர் போராடுகிற மாதிரியான கதை. ஹாலிவுட் படமான இன்விசிபிள் மேன் மாதிரி மறையும் தன்மை கொண்டவராக சித்தார்த் மாறி பழிவாங்குகிற கதை. என்கிறார்கள். படத்தின் டீசரும், டைட்டிலும் அதை உறுதிப்படுத்துகிறது.