Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விந்தியா, ஜெ., சமாதியில் மாம்பழம் வைத்து வணங்கியது ஏன்?

14 ஜூன், 2019 - 11:09 IST
எழுத்தின் அளவு:
actress-vindhya-tribute-in-jayalalitha-memorial-with-mangoes

நடிகை விந்தியா, ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் பரபரப்பான நடிகையாக இருந்தார். அவருக்கு சில காலம் கழித்து வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை என்றதும், அவர் சினிமாவை விட்டு விட்டு, அரசியலில் ஆர்வம் செலுத்தத் துவங்கினார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து, அவர் தன்னுடைய அரசியல் ஆர்வம் குறித்துச் சொல்ல, அவரை, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டார் ஜெயலலிதா.


அதன் பின், தேர்தல் என்றால், நடிகை விந்தியா பிரசாரத்துக்குக் கிளம்பி விடுவார். கருணாநிதியையும், ஸ்டாலினையும் மிகக் கடுமையாக விமர்சித்து பேசியதாலேயே, ஜெயலலிதாவுக்கு பிடித்தமான கட்சிக்காரர் ஆனார் விந்தியா.


ஜெயலலிதாவுக்குப் பிடித்தவர் என்பதாலேயே, நடிகை விந்தியாவை அழைத்து, தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் போடுவதற்கு, கட்சியின் முன்னணித் தலைவர்கள் அவ்வளவு பேரும் ஆர்வம் காட்டினர்.


இந்நிலையில், கடந்த 2016ல் ஜெயலலிதா இறந்து போய் விட, நடிகை விந்தியா கட்சியில் அடுத்து என்ன செய்வது என புரியாமல் தடுமாறினார். கட்சியினர், தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்த போதெல்லாம், எனக்கு மனசு சரியில்லை என கூறி, பிரசாரத்துக்குச் செல்லாமல் தவிர்த்து வந்தார். இறுதியில், கட்சியின் தலைமையில் இருந்து சிறப்பு அழைப்பு வர, சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்தார்.


அவரது பிரசாரம் எடுபடாதது மட்டுமல்ல; கட்சியும் படு தோல்வியை சந்தித்து. இதைத் தொடர்ந்து மீண்டும் அப்செட்டாகி வீட்டுக்குள் முடங்கினார் நடிகை விந்தியா.


இந்நிலையில், நேற்று முன் தினம் திடுமென சென்னை மெரினாவில் இருக்கும் ஜெ., சமாதிக்கு மாம்பழக் கூடையுடன் சென்றவர், மாம்பழத்தை சமாதி முன்பாக வைத்து வணங்கினார். பின், அதை அந்தப் பகுதியில் போவோர் வருவோருக்கெல்லாம் வழங்கினார்.


"ஆந்திராவில் தோட்டத்தில் இருக்கும் மாம்பழம், மறைந்த ஜெயலலிதாவுக்குப் பிடிக்கும். ஒவ்வொரு ஆண்டும், மாம்பழம் கொண்டு போய் கொடுப்பேன். ரசித்து சாப்பிடுவார். இரு ஆண்டுகளாக அவர் இல்லை. அதனால், இந்த மாம்பழ சீசனுக்கு, மாம்பழம் வரவழைத்து, அதை சமாதியில் வைத்து வணங்கி விட்டு, ஏழைகளுக்கு அதைக் கொடுத்து மகிழ்ந்தேன். இது ஜெயலலிதாவுக்கு பிடிக்கும் என்பதால், அதை செய்தேன் என்று விந்தியா கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இசைக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பு வீடியோ: தேவி ஸ்ரீ பிரசாத்இசைக்குழுவினருக்கு நன்றி ... பாலாவுக்கு ஆட்டம் காட்டும் ஆர்யா பாலாவுக்கு ஆட்டம் காட்டும் ஆர்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

swaminathan - london,யுனைடெட் கிங்டம்
14 ஜூன், 2019 - 16:30 Report Abuse
swaminathan All sort of wrong people are occupying public space . They venerate evil and misguide the gullible masses. God save our state.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in