Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசைக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பு வீடியோ: தேவி ஸ்ரீ பிரசாத்

14 ஜூன், 2019 - 11:02 IST
எழுத்தின் அளவு:
devi-sri-prasath-make-video-to-thank-music-troop

'மகரிஷி' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தனது இசை குழுவினருக்காக ஒரு 'நன்றி தெரிவிப்பு' வீடியோ வெளியிடுகிறார்

தேவி ஸ்ரீ பிரசாத், பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர். அவரது ஆட வைக்கும் இசைக்காகவே 'ராக்ஸ்டார்' என புகழ் பெற்றவர்.


இந்த வருடத்தின் மாபெரும் வெற்றித் திரைப்படமான 'மகரிஷி' படத்திற்கான பங்களிப்பின் மூலம், மீண்டும் இசைத் துறையின் பேசுபொருளாக மாறி, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார்.


'மகரிஷி' திரையரங்குகளில் இன்றுடன் தனது வெற்றிகரமான 30வது நாளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் மகேஷின் திரையுலக பயணத்தின் ஒரு முக்கியமான மைல்கல் என்பதோடு, அவரது 'வெள்ளி விழா' படமும் கூட.


தேவி ஸ்ரீ பிரசாத், இந்தப் படத்துக்கு இசையமைத்து, இசையின் மூலம், ஒரு விவசாயிக்கும் ஒரு திரைப்படத்தின் கதாநாயகனுக்கும் இடையே உள்ள ஒரு கண்ணுக்கு தெரியாத தொடர்பை ஏற்படுத்துவதில், மகத்தான வெற்றி கண்டிருக்கிறார். குறிப்பாக பின்னணி இசை. இப்பணியை மிகவும் செவ்வனே செய்திருக்கிறார்.


படத்தின் முப்பதாவது நாள் வெற்றி விழாவில் தேவி ஸ்ரீ பிரசாத் பேசினார்.


இசைக்குழுவினருக்காக நன்றி தெரிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிடுவது குறித்து, தேவி ஸ்ரீ பிரசாத் பேசியிருப்பதாவது:


இமாலய வெற்றி பெற்ற 'மகரிஷி', தனது வெற்றிகரமான 30வது நாளை திரையரங்குகளில் நிறைவு செய்கிறது. இந்த மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் பாடல்களும், பின்னணியும் இசையும் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்திரைபடத்தில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த மகேஷ், இயக்குனர் வம்ஷி, தயாரிப்பாளர்கள் தில் ராஜூ, அஸ்வினி தத், பிவிபி ஆகியோருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த சந்தோஷமான வேளையில், 'சரிலேறு நீக்கேவாறு' என்ற தனது அடுத்த திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்ததற்கும் மகேஷுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.'


'அருமையான இத்தருணத்தில், இந்த வெற்றி படத்திற்காக என்னுடன் பணியாற்றிய இசை கலைஞர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள், உதவியாளர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த காணொளியைத் தயாரித்து இருக்கிறேன். ஒரு வெற்றிப்படத்தின் பின்னணியில் இருக்கும் இசையமைப்பாளர் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகிறார் என்பதை மாற்றும் வகையில், வெற்றிக்கு உழைத்த அனைவருமே அவரவர்களுக்குரிய அடையாளங்களை பெறவேண்டும் என்பதால் இந்த சிறு முயற்சி.'


இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லைஇப்போதைக்கு யாரையும் ... விந்தியா, ஜெ., சமாதியில் மாம்பழம் வைத்து வணங்கியது ஏன்? விந்தியா, ஜெ., சமாதியில் மாம்பழம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in