Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை

14 ஜூன், 2019 - 00:42 IST
எழுத்தின் அளவு:
Now-no-one-loves-him

பரதேசி படம் மூலம் திரைக்கு வந்த நடிகை ரித்விகா, பிக்பாஸ் -- 2வது சீசனில் வெற்றியாளரானார். தற்போது விஜய் சேதுபதியுடன், நம்மவன் படத்தில் நடிக்கிறார்; அவருடன் பேசியதிலிருந்து:


சினிமாவில் உங்கள் பின்னணி?


சினிமாவில், எங்கள் குடும்பத்தில் என்னைத் தவிர யாரும் இல்லை. பெற்றோர் முதலில் மறுத்தனர். 'சினிமா வேண்டாம்; அது, நிரந்தரமான வேலை இல்லை' என, அப்பா கூறினார். பின், அவர் சினிமாவை ஏற்றுக் கொண்டார்.


அடுத்தடுத்து நடிக்கும் படங்கள்?


அமலாபால் உடன், கடவர் படத்தில் நடிக்கிறேன். படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய்சேதுபதியுடன் நம்மவன் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.


எந்த மாதிரியான பாத்திரங்களை ஏற்க விரும்புகிறீர்கள்?


துணை பாத்திரங்களில் தான், அதிகம் நடித்துள்ளேன். சிறிது நேரம் வந்தாலும், நாம் பேசப்படுகிறோம். விஜய் சேதுபதி போன்ற சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் போது, துணை பாத்திரமாக இருந்தாலும், நாம் பேசப்படுவோம். நாயகி பாத்திரம் இல்லை என்றாலும், இது போன்ற பாத்திரங்களை, நான் தவறவிடுவதில்லை.


பிக்பாஸ் - 3 துவங்குகிறது; அதைப்பற்றி கூறுங்கள்?


ஆமாம்; நிறையவே எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த சீசனில், பிக்பாஸ் வீட்டுக்கு செல்வேனா எனத் தெரியாது. இறுதியில் அதுபற்றி தகவல் கிடைக்கலாம்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது தவறு என, எப்போதாவது நினைத்ததுண்டா?


அந்த மாதிரி, ஒரு போதும் நினைக்கவில்லை. வெற்றி பெறுவேன் என்றும் நினைக்கவில்லை. துவக்கத்தில், நான்கு வாரம், ரொம்பவே அமைதியாகவே இருந்தேன். நான் வெளியே எப்படி இருப்பேனோ, உள்ளேயும் அப்படியே இருந்தேன். இது மட்டுமே, சில நேரங்களில் தவறாக நடக்கிறோமோ என எண்ணத் தோன்றியது; இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் நான், நானாகவே இருந்தேன்.


உண்மையை சொல்ல வேண்டும்; பிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்ட படப்பிடிப்பா?


முதல் சீசன் நிகழ்ச்சியை பார்த்ததும், நானும் அப்படித் தான் நினைத்தேன். இதெல்லாம் திட்டமிட்டு நடக்கும் படப்பிடிப்பு என்றே நினைத்திருந்தேன். ஆனால், நேரடியாக பார்த்த போது எதிர்பார்த்ததை விட வேறுமாதிரி இருந்தது. அது, திட்டமிட்ட படப்பிடிப்பு இல்லை.




நடிகையருக்கு சம்பளம் குறைவாக இருக்கிறது என்ற நிலையில், துணை பாத்திரங்களுக்கு சம்பளம் சரியாக கிடைக்கிறதா?


என்னை பொறுத்தவரை, அவ்வளவு தான் தர முடியும் என நினைக்கிறேன். இப்போது தயாரிப்பு செலவு மிகவும் அதிகரித்து விட்டது. சில சமயம் நஷ்டமும் ஏற்படுகிறது. துணை பாத்திரங்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தாலும், சரியாக கொடுத்து விடுகின்றனர்.


புதிதாக சினிமாவுக்கு வருபவர்களுக்கு உங்கள் ஆலோசனை?


சினிமாவுக்கு வருபவர்களுக்கு, எதையும் ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவம் இருக்க வேண்டும். முதல் படத்திலேயே பிரபலமாகி விட வேண்டும் என நினைக்கின்றனர். அந்த மாதிரி யாருக்கு கிடைக்கும். சூப்பர் ஸ்டாருக்கே அப்படி கிடைக்கவில்லை. சினிமா, கடல் மாதிரி; பொறுமை இருந்தால் சாதிக்கலாம். இப்போது வருபவர்களுக்கு பொறுமை குறைவு. நான் சீனியர் நடிகை கிடையாது. என் அனுபவத்தில், இதை நான் கூறுகிறேன்


உங்கள், 'ரோல்மாடல்' யார்?


எனக்கு ரொம்ப பிடித்தவர் சரிதா. அவரது படங்களை பார்த்து தான், வளர்ந்தேன். அவர் நடித்த படங்களை, 'டிவி'யில் போட்டால் அப்படியே அமர்ந்து விடுவேன்; ரேவதியும் பிடிக்கும்.


உங்களுடையது காதல் திருமணமாக இருக்குமா?


எனக்கே தெரியவில்லை. இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை.- ரித்விகா -


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பேயை விரட்டுவாரா  ஜி.வி.பிரகாஷ்பேயை விரட்டுவாரா ஜி.வி.பிரகாஷ் இசைக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பு வீடியோ: தேவி ஸ்ரீ பிரசாத் இசைக்குழுவினருக்கு நன்றி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in