Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நானா படேகருக்கு எதிராக சாட்சிகள் இல்லை : போலீஸ் - நீதி வெல்லும் : தனுஸ்ரீ

13 ஜூன், 2019 - 17:50 IST
எழுத்தின் அளவு:
No-Proof-Against-Nana-Patekar-in-Sexual-Harassment-Case

கடந்த ஆண்டு திரையுலகில் உள்ள பிரபலங்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து அம்பலப்படுத்துவதற்காக மீ டூ என்கிற பிரச்சாரத்தைக் கையில் எடுபதற்கு முதல் ஆளாக வித்திட்டவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பிரபல நடிகர் நானா படேகர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்கிற படத்தில் நடித்தபோது தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து போலீசில் புகாரும் அளித்தார்.

இதுதொடர்பான வழக்கும் மும்பை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது கூறி புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை போலீஸ் ஐகோர்ட்டில் அளித்த அறிக்கையில் தாக்கல் செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் இருந்து நானா படேகர் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது.

இதற்கிடையே தனுஸ்ரீ தத்தாவின் வக்கில், மும்பை போலீஸ் நானா படேகரை பாதுகாக்க உதவி வருகின்றனர் என குற்றம் சாட்டியிருக்கிறார்.

தனுஸ்ரீதத்தா கூறுகையில், இது எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. நம் நாட்டில் பெண்களுக்கு இப்படி தான் நடக்கும். ஊழல் போலீஸ் அதிகாரிகள் நானா படேகர் எந்த தவறும் செய்யவில்லை என கூறுகின்றனர். நானா படேகரால் சினிமா துறையில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையான சாட்சிகள் மவுனமாய் உள்ளனர். இருந்தாலும் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இந்த நிலையில் நானா படேகர் மீதான பாலியல் வழக்கை விசாரித்த போலீசார், அவருக்கு எதிரான சாட்சிகள் எதுவும் இல்லை எனக் கூறி கைவிரித்து விட்டனராம். சாட்சிகள் என ஆஜரானவர்கள் கூறிய எதுவும் தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது கூறிய குற்றச்சாட்டுகளுடன் பொருந்திப் போகவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

அநேகமாக சாட்சிகளுக்கு நிஜமாகவே என்ன நடந்தது என்று தெரியாமல் போயிருக்கலாம், அல்லது அவர்கள் நினைவில் இருந்த அவை சரியாக ஞாபகத்திற்கு வராமல் போயிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

அதேசமயம் இது குறித்து தனுஸ்ரீ தத்தா கூறும்போது நானா படேகராலோ அல்லது அவரது நண்பர்களாலோ சாட்சிகள் மிரட்டப்பட்டு உண்மைக்கு விரோதமாக சாட்சி அளித்துள்ளார்கள் என புலம்பியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இங்கிலாந்தில் பாரத் படம் பார்த்த இந்திய கிரிக்கெட் அணிஇங்கிலாந்தில் பாரத் படம் பார்த்த ... நிம்மதியான வாழ்க்கை! நிம்மதியான வாழ்க்கை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in