Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயராம் தலையீட்டால் தப்பித்த நேசமணி

13 ஜூன், 2019 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Siddhique-about-Nesamani

சமீபத்தில் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரம், உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. அதன்பிறகு அந்த படத்தில் நடித்த வடிவேலு, ரமேஷ் கண்ணா, சார்லி ஆகியோர் அந்த படத்தில் குறிப்பிட்ட அந்த காட்சியில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டனர். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் சித்திக், மோகன்லாலை வைத்து இயக்கி வரும் பிக்பிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால், இப்போது நேசமணி கதாபாத்திரம் குறித்த சுவாரசியமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.

மலையாளத்தில் முதலில் இந்தப்படம் எடுக்கப்பட்டு பின்னர் தான் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. மலையாளத்தில் இந்தப்படத்தின் காட்சிகளை உருவாக்கியபோது நேசமணி கதாபாத்திரத்தின் தலையில் சுத்தியல் விழுவது போன்ற காட்சிகள் எல்லாம் கடைசிநாள் படப்பிடிப்பின் போதுதான் எடுக்கப்பட்டனவாம். அது மட்டுமல்ல மொத்த படத்தையும் படத்தொகுப்பு செய்தபோது காட்சிகளின் நீளம் கருதி நேசமணி - சுத்தியல் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க முடிவு செய்தாராம் சித்திக்.

ஆனால் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெயராம் தலையீட்டால் அந்த காட்சியை நீக்காமல் படத்திலேயே வைத்து விட்டாராம் இயக்குநர் சித்திக். மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்ததால் அந்த காட்சி தமிழில் ரீமேக் செய்யப்பட்டபோது, இங்கேயும் அப்படியே இருக்கட்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறிவிட்டார்களாம். அதனால் தமிழிலும் நேசமணி மற்றும் அவர் தலையில் சுத்தியல் விழும் காட்சிகள் தவறாமல் இடம் பிடித்தது எனக் கூறியுள்ளார் இயக்குனர் சித்திக்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்க தேர்தல் : விஜயகாந்திடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணிநடிகர் சங்க தேர்தல் : விஜயகாந்திடம் ... நேர்கொண்ட பார்வை மூலம் தமிழுக்கு வரும் மலையாள வில்லன் நேர்கொண்ட பார்வை மூலம் தமிழுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
14 ஜூன், 2019 - 08:26 Report Abuse
vasumathi நகைசுவை புயல் என்று ஒன்று உள்ளதே..
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
14 ஜூன், 2019 - 04:08 Report Abuse
meenakshisundaram இதே காட்சிகள் கன்னடத்திலும் வருகின்றன ,ஆனா சொதப்பல் ஆகிவிட்டது ,ஏனென்றால் தமிழில் திரு வடிவேல் அவர்கள் மற்றும் அந்த டீம் சூப்பர் ஆக நடித்திருந்ததால் ,மீண்டும் மீண்டும் பாற்க த்தூண்டும் வடிவேலின் திறன் எல்லாவற்றையும் Minji நிற்கிறது,கலைவாணர் ,சின்ன kalai வாணர் ப்டினெலாம் பட்டம் கொடுக்கிறாங்க .ஏன் வடிவேலுக்கு அந்த ரெகக்னிஷன் இல்லே?கொடுக்கலே ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in