Advertisement

சிறப்புச்செய்திகள்

கொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர்? | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்க தேர்தல் : விஜயகாந்திடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி

13 ஜூன், 2019 - 16:57 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-Election-:-Swamy-sankaradas-team-met-Vijayakanth

நடிகர் சங்கத்திற்கு வருகிற ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்தமுறை பதவி வகித்த நாசர் தலைமையிலான பாண்டவர் அணி ஒரு புறமும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் மற்றொரு புறமும் களம் காண்கின்றனர். இரு அணியினரும் முன்னணி நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

இந்நிலையில், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர், நடிகர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கோரினர். இந்த சந்திப்பின் போது, தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசிரி.கணேஷ், பொருளாளர் பிரசாந்த், துணை தலைவர்கள் குட்டி பத்தமினி, உதயா, செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட பலரும் உடன் சென்று ஆதரவு கேட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கனேஷ் கூறும்போது : விஜயகாந்திடம் எங்கள் அணிக்கு ஆதரவு கேட்டோம். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பலரையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். விஷால் அணி எதுவும் செய்யவில்லை, அதனால் தான் நாங்கள் போட்டியிடுகிறோம். இந்த தேர்தலில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. நடிகர் சங்க கட்டடத்தை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார்.

பாக்யராஜ் பேசும்போது :
எங்கள் அணி வெற்றி பெறும் என விஜயகாந்த் கூறினார். அதரவும் தந்தார். நாடக நடிகர்களுக்கு ஓட்டுக்கு பணம் தர வேண்டும் என பேசவில்லை. அவர்கள் கஷ்டத்தில் உள்ளனர். அவர்கள் கேட்கும்போது தனிப்பட்ட முறையில் எனது உதவியை செய்வேன் என்று தான் கூறினேன். எனது கருத்து தவறாக பரப்பப்பட்டு வருகிறது. தேர்தலுக்கும், நான் சொன்ன கருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் : ரஞ்சித்திற்கு கோர்ட் கண்டனம்ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் : ... ஜெயராம் தலையீட்டால் தப்பித்த நேசமணி ஜெயராம் தலையீட்டால் தப்பித்த நேசமணி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16 ஜூன், 2019 - 07:17 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இது விஜயகாந்திற்கு தெரியுமா?
Rate this:
pdeep -  ( Posted via: Dinamalar Android App )
13 ஜூன், 2019 - 17:42 Report Abuse
pdeep விஜயகாந்த் மக்கள் நல கூட்டணி. Lol
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in