Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் : ரஞ்சித்திற்கு கோர்ட் கண்டனம்

13 ஜூன், 2019 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Court-condemn-to-Ranjith

மாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் செய்த இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ரஞ்சித்திற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கி உள்ளார். தற்போது ஹிந்தியில் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை தழுவி படம் எடுத்து வருகிறார். தலித் அரசியல் பேசும் ரஞ்சித், கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் தலித் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஞ்சித், மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் ஜாதி ரீதியிலான விமர்சனங்களையும் முன் வைத்தார்.

இவரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். தமிழ் பெண்களை இழிவுபடுத்தி உள்ளார். சாதி பிளவு ஏற்படும் வகையில் அவரது பேச்சு உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி., உத்தரவின் பேரில் திருப்பனந்தாள் போலீசார் மதகலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் அவர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார் ரஞ்சித். வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே நான் பேசினேன். எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என தனது மனுவில் கூறியிருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் இன்று(ஜூன் 13) வந்தது.

அப்போது நீதிபதி, ரஞ்சித்திற்கு கண்டனம் தெரிவித்தார். இன்றைக்கு பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, மக்கள் போற்றும் ராஜராஜன் பற்றி அவதூறு பேச வேண்டிய அவசியம் என்ன என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் ரஞ்சித்தை வரும் 19-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்றும், 19-ம் தேதி, திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
நேர்கொண்ட பார்வை - அஜித்தின் நேர்மைநேர்கொண்ட பார்வை - அஜித்தின் நேர்மை நடிகர் சங்க தேர்தல் : விஜயகாந்திடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி நடிகர் சங்க தேர்தல் : விஜயகாந்திடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Raj - Chennai,இந்தியா
18 ஜூன், 2019 - 16:55 Report Abuse
Raj இறந்த மாமன்னரை பற்றி அவதூறு பேசும் ரஞ்சித் தைரியம் இருந்தால் இன்றைய ஜாதி அரசியல் செய்யும் அரசியல் வாதிகளை கண்டிப்பாரா?
Rate this:
Straight Bat - Chennai,இந்தியா
17 ஜூன், 2019 - 10:29 Report Abuse
Straight Bat A couple of films and they think they are God's gift to mankind. What do these people possess to criticise the great Raja Raja Cholan whom the whole world praises for his rule and governance. The press must also ignore comments made by these people who think controversies would help them in their image.
Rate this:
a.s.jayachandran - chidambaram,இந்தியா
15 ஜூன், 2019 - 17:08 Report Abuse
a.s.jayachandran தேர்தலின் போது மட்டும் ஏன் எல்லோரும் மௌனம் காத்தார்கள்.
Rate this:
sambantham sasikumar - chennai,இந்தியா
15 ஜூன், 2019 - 14:35 Report Abuse
sambantham sasikumar இவனுடைய படத்துல ஓர் வசனம் வரும் அதுல ரஜினி நான் கால்மேல கால் போட்டுத்தான்டா உக்காருவேன்னு பேசுவான். நான் சொல்லுறேன் நீ என் வீட்டிற்கு வந்தால் கைகட்டி ஓர் ஓரமா தாண்ட உக்காரனும். உன்வீட்டில் நீ அம்மணமா கூட இரு அதுபற்றி கவலை இல்ல. நீ ரஜினி வீட்டுக்கு கால்ஷீட் கேட்டு போகும்போது எப்படி நின்ன அதுதான் நிலைக்கும். அதுதான் உன்னை வளர்த்தது இப்போ உன் நாக்கு உன்னை இறங்க வைக்குது சாதி பற்றி பேசுபவன் நிலைக்கமாட்டான் அவன் சாதி அவனை ஒதுக்கும்.
Rate this:
Dr.K.Sundaramoorthy - chennai,இந்தியா
15 ஜூன், 2019 - 14:07 Report Abuse
Dr.K.Sundaramoorthy தமிழ் கலாசாரத்துக்கு மகுடம் சூடிய மாமன்னர் ராஜா ராஜா சோழனை இவ்வாறு தவறான தகவல்கள் பேசி சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தும் எண்ணம் உள்ளவர்கள் உடனடியாக கண்டிக்க படவேண்டும் . சமீப காலங்களில் சினிமாவில் உள்ளவர்கள் - வைரமுத்து - ஆண்டாள் பற்றி கனிமொழி -வெங்கடேச பெருமாள் பற்றி குறிப்பாக இந்து மதத்தை கொச்சைப்படும் நோக்கோடு இவ்வாறு செய்கிறார்கள் . இவர்களின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை .
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in