Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சாஹோ' டீசர் வெளியீடு : ஹாலிவுட்டிற்கு சவால் விடும் ஆக்ஷன்

13 ஜூன், 2019 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Saaho-Teaser-out-:-Action-sequence-high-equal-to-Hollywood

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு இந்திய நாயகனாக உயர்ந்துள்ள பிரபாஸ் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'சாஹோ' படத்தின் டீசர் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் பட டீசரைப் பார்க்கிறோமோ என்று சொல்லும் அளவிற்கு பிரம்மாண்டமும், ஆக்ஷன் காட்சிகளும் டீசரில் இடம் பெற்றுள்ளன.

டீசர் முழுவதுமே ஆக்ஷன், சேசிங் காட்சிகள்தான் அதிகம் உள்ளன. சில காட்சிகளில் பிரபாஸின் ஹீரோயிசத்தை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவருக்கும் ஷ்ரத்தா கபூருக்கும் இடையில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்லும் ஆரம்பம் மற்றும் முடிவுக் காட்சிகள் மட்டுமே வசனக் காட்சிகளாக டீசரில் உள்ளன. ஹாலிவுட்டின் ஆக்ஷன் படங்களான மிஷன் இம்பாசிபிள், பாஸ்ட் அண்ட் பியுரியஸ் படங்களை பார்ப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது.

சர்வதேச அளவிலான மார்க்கெட்டை கருத்தில் கொண்டு இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. டீசரிலேயே இந்தியாவில் இருந்து மிகப்பெரிய ஆக்ஷன், த்ரில்லர் படம் என்ற வாசகத்தை சேர்த்துள்ளனர்.

படத்தை நான்கு மொழிகளில் எடுத்துள்ளதாக டீசரில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், டீசரில் ஷ்ரத்தா கபூர் பேசும் போது இருக்கும் உதட்டசைவு இது ஒரு டப்பிங் படம்தான் என்பதைக் காட்டுவதாக உள்ளது. 'பாகுபலி' படங்களைப் போன்றே இந்தப் படத்தையும் நேரடித் தமிழ்ப் படம் என்று நம்ப வைக்க இப்போதே வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

இவ்வளவு பிரம்மாண்டமான படத்திற்கு பின்னணி இசை அமைக்கப் போவது தமிழ் இசையமைப்பாளர் ஜிப்ரான். இப்படத்திற்காக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சங்கர் இஷான் லாய் இப்படத்திலிருந்து சமீபத்தில்தான் விலகினார்கள். அடுத்து படத்திற்கு யார் இசையமைக்கப் போகிறார் என்பது குறித்து பல யூகங்கள் வெளிவந்தன. இப்போது ஜிப்ரான் பின்னணி இசையமைக்கிறார் என டீசரின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலில் தெரிவித்துள்ளார்கள்.

இப்படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் மதி, படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனர் சாபு சிரில், ஸ்டன்ட் இயக்குனர்கள் திலீப் சுப்பராயன், ஸ்ட்ன்ட் சில்வா அதிகமான தமிழ்ப் படங்களில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்துக்கு அடி போடும் சுசீந்திரன்அஜித்துக்கு அடி போடும் சுசீந்திரன் கிண்டல் செய்த நபருக்கு வெங்கட் பிரபுவின் பதில் கிண்டல் செய்த நபருக்கு வெங்கட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

JMK - Madurai,இந்தியா
15 ஜூன், 2019 - 12:12 Report Abuse
JMK அஜித் பட, நேர் கொண்ட பார்வையைவிட படம் டீஸர் பத்து மடங்கு நன்றாக உள்ளது ?
Rate this:
14 ஜூன், 2019 - 10:36 Report Abuse
சந்தோஷ் கார் bike chasing scene இருந்தாலே அது hollywood படத்துக்கு சவால்.. சூப்பர் பா
Rate this:
TechT - Bangalore,இந்தியா
13 ஜூன், 2019 - 17:14 Report Abuse
TechT போம்ம படம் மாதிரி இருக்கு
Rate this:
R S BALA - Chennai,இந்தியா
13 ஜூன், 2019 - 16:09 Report Abuse
R S BALA பட தலைப்பின் அர்த்தம் என்ன இது எந்த மொழி வார்த்தை .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in