Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரோஜா எதிர்பார்த்தது அமைச்சர் - கிடைத்ததோ வாரிய தலைவர்

13 ஜூன், 2019 - 10:54 IST
எழுத்தின் அளவு:
New-post-for-actress-Roja-in-politics

தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. கமல் தவிர அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த ரோஜா இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே செட்டிலானார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் ஆந்திர அரசியலில் குதித்தார். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அவர் பின்பு அதிலிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசில் இணைந்தார்.

கடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தோற்றாலும் ரோஜா நகரி தொகுதியில் வெற்றி பெற்று அந்த கட்சியின் குரலாக சட்டசபையில் குரல் எழுப்பினார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக பல போராட்டங்களை நடத்தினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பெரிய வெற்றி பெற்றது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆனார். அவரது அமைச்சரவையில் துணை முதல்வர் என்ற அளவிற்கு ரோஜா பேசப்பட்டார். ஆனால் அமைச்சரவையில் கூட இடம் கிடைக்கவில்லை. இதனால் ரோஜா அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ரோஜாவை அழைத்து பேசி சமாதானம் செய்தார்.

இந்த நிலையில் ரோஜா ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இது ஒரு அமைச்சருக்குரிய அதிகாரம் உள்ள பதவி இல்லை என்றாலும். அமைச்சருக்குரிய எல்லா வசதிகளும் கிடைக்கிற பதவி. இந்த பதவியால் ரோஜா ஓரளவுக்கு திருப்தி அடைந்துள்ளார். என்றாலும் அமைச்சர் பதவி எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆதி ஜோடியாக ஸ்டார் பிளஸ் அகன்ஷா சிங்ஆதி ஜோடியாக ஸ்டார் பிளஸ் அகன்ஷா சிங் அஜித்துக்கு அடி போடும் சுசீந்திரன் அஜித்துக்கு அடி போடும் சுசீந்திரன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

பஞ்ச்மணி - கோவை,இந்தியா
13 ஜூன், 2019 - 12:45 Report Abuse
பஞ்ச்மணி அதுக்குள்ளாற என்னமா படம் ஒட்டுனீங்க துணை முதலமைச்சராம் துணை அமெரிக்க ஜனாதிபதி அப்படி இப்படின்னு என்னமா ஏத்தி உட்டு இப்படி பண்ணிடீங்களே மக்களே
Rate this:
Ashanmugam - kuppamma,இந்தியா
13 ஜூன், 2019 - 12:33 Report Abuse
Ashanmugam இது கொடுத்ததே ரோஜாவுக்கு பெரிய விஷயம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in