Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வதந்தி பரப்பாதீர்கள் : கிரேஸி மோகன் சகோதரர் வேண்டுகோள்

12 ஜூன், 2019 - 17:26 IST
எழுத்தின் அளவு:
Dons-spred-rumour-says-Crazy-Mohan-Brother-Maadhu-Balaji

நாடக ஆசிரியர், நடிகர், வசனகர்த்தா என பன்முகம் திறமை கொண்ட கிரேசி மோகன், ஜூன் 10ம் தேதி மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு அவரது குடும்பத்தாரை மட்டுமல்ல திரையுலகிலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கிரேஸி மோகன் மரணம் தொடர்பாக தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அவருக்கு சர்க்கரை வியாதி போன்ற நோய் இருந்ததாக அவர்கள் வதந்தி பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இதனை மறுத்து கிரேஸியின் சகோதரர் மாது பாலாஜி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது : எனது சகோதரர் கிரேஸி மோகன் ஜூன் 10-ம் தேதி அன்று மதியம் 2 மணிக்கு காலமானார். நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் எங்களுக்கு வருத்தம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அவர் இறந்தது எங்களது குடும்பத்திற்கே பேர் அதிர்ச்சியாக உள்ளது. காரணம், அவர் வியாதி வந்தோ, கஷ்டப்பட்டோ மரணமடையவில்லை. திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

இறந்த அன்றைய தினம் காலையில் கிரேஸியை சந்தித்தேன். வழக்கம் போல் மகிழ்ச்சியாக பேசினார். எப்போதும் போல் காலை உணவு உட்கொண்டார். 9.45 மணியளவில் எனக்கு போன் செய்து, மூச்சு விட சிரமமாக இருப்பதாகவும், அடி வயிறு வலிப்பதாகவும் கூறினார். உடனடியாக நான் எனது காரை எடுத்துக் கொண்டு, அவரை காவிரி மருத்துவமனையில் அனுமதித்தேன். டாக்டர்கள் தங்களால் முடிந்தளவுக்கு சிகிச்சை கொடுத்தார்கள். அதில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் என்ன செய்வது அவருக்கு வந்தது கடுமையான மாரடைப்பு. நம்மளை எல்லாம் கஷ்டத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்துவிட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக விதி போல் நடந்துவிட்டது.

இந்த நேரத்தில் உங்களிடத்தில் நான் வேண்டுவது எல்லாம். அவர் வியாதி வந்து இறக்கவில்லை. இதுபோன்ற செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அவருக்கு எந்தவிதமான வியாதியும் கிடையாது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற எந்த பிரச்னையும் இல்லை. இறப்பதற்கு முதல் நாள் இரவில் பெருமாள் பெயரில் 12 கவிதைகள் எழுதிவிட்டுத்தான் இறந்துள்ளார். திடீரென்று நிகழ்ந்த சம்பவம் இது. என்ன செய்வது, நம் தலையெழுத்து. நம்மை சோகத்தில் ஆழ்த்திவிட்டு அவர் சந்தோஷமாக கிளம்பிவிட்டார்.

இவ்வாறு மாது பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கர்ணனுக்கு உயிர் கொடுப்பாரா விக்ரம்..? ; விரக்தியில் இயக்குனர்கர்ணனுக்கு உயிர் கொடுப்பாரா ... நேர்கொண்ட பார்வை டிரைலர் வெளியீடு நேர்கொண்ட பார்வை டிரைலர் வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD - Mississauga,கனடா
12 ஜூன், 2019 - 17:38 Report Abuse
KayD something fishy... recent aa oru award function tv tele la naan paathathu la avar stage eera viya situation . Mr. Mohan aal nadaka kooda mudiyavillai. I thing idha same brother or vera yaaro oruvar thaan thaangi pidithu nadathi kootitu vandhaar. Sala sala nu pesum Mr Moghan andha stage la pesavae thinarinaar. appo en veetil sonnaen. something wrong with this guy' s health. Diabetes vandhu irandhu ponnar nu sonna ippo enna . avar vandhaar nammai sirika vaithaar sindhika vaithaar ippo kaneer vida vaithu vittutu poitaar. avar vandha vellai mudinji pochi safe aa purapattu poitaar..
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
13 ஜூன், 2019 - 09:25Report Abuse
S Ramkumarசார் க்ரேஸிக்கு அறுபத்தி ஏழு வயசு. அருவத்துக்கு மேல எதனை நாள் இருந்தாலும் அது ஆண்டவன் கருணை. அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம். கிரேசி எழுதிய நாடகங்கள், திரை கதைகள், வசனங்கள், நகை சுவை காட்ச்சிகளின் மூலம் கிரேசி சாக வரம் பெற்று விட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். க்ரேஸியின் குடும்பத்தாருக்கு எங்கள் மனமார்ந்த அனுதாபங்கள்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in