Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தில்லானா மோகனாம்பாளுக்கு இன்று 87வது பிறந்த நாள் : பத்மினி பற்றிய ஒரு நினைவு

12 ஜூன், 2019 - 15:08 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Padmini-amma

நாட்டியபேரொளி என வர்ணிக்கப்படுபவர் நடிகை பத்மினி. அவரின் 87வது பிறந்தநாள் இன்று. திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தில் பிறந்த பத்மினி, 4வயதில் நாட்டியம் பயின்றவர். ஆயுள் முழுவதும் ஆடிக் கொண்டே இருந்தார். லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள் திருவாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் நடன நிகழ்ச்சி நடத்தினார்கள். பின்னர் மூவருமே நடிகை ஆனார்கள்.

திரைப்படங்களில் நாட்டியம் மட்டுமே ஆடி வந்த சகோதரிகள், அதன் பிறகு நடிகை ஆனார்கள். ஒரு சில படங்களில் நடனமாடி வந்த பத்மினி, மணமகள் என்ற தமிழ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின்னர் பல படங்களில் நடித்தார். வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வைஜயந்தி மாலாவுடன் பத்மினி ஆடும் போட்டி நடனம் இன்றும் கிளாசிக் நடனமாக போற்றப்படுகிறது.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி ஆகியோருக்கு ஜோடியாக தொடர்ந்து 6 ஆண்டுங்கள் நடித்தார். சிவாஜி பத்மினி ஜோடி தான், மேட் பார் ஈச் அதர் ஜோடியாக சினிமாவில் வலம் வந்தனர். பணம் என்ற படத்தில் தான் முதன் முறையாக சிவாஜியுடன் ஜோடியாக நடித்தார் பத்மினி. அதன் பிறகு 58 படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த சாதனையை வேறெந்த ஜோடியும் நிகழ்த்தவில்லை.

சிவாஜி, பத்மினி ஜோடிக்கு நிகரான ஜோடி அதன் பிறகு வாய்க்கவே இல்லை. இருவரும் நடித்த தில்லானா மோகனாம்பாள் படம் தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளம்.

நாட்டியத்துக்காகவும், நடிப்புக்காகவும் பல்வேறு விருதுகளை பெற்ற பத்மினி, சினிமாவில் இருந்து ஒய்வு வெற்ற பிறகு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு நாட்டிய பள்ளி நடத்தினார். தனது 75வது வயதில் காலமானார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கல்லைக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா?: கஸ்தூரி ஆவேசம்கல்லைக் கூட விட்டு வைக்க ... மீண்டும் படம் இயக்கும் ராஜூ சுந்தரம் மீண்டும் படம் இயக்கும் ராஜூ சுந்தரம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
14 ஜூன், 2019 - 17:19 Report Abuse
Vasudevan Srinivasan அழகு நடிப்பு நாட்டியம் என்று அனைத்திலும் உயர்ந்த நட்சத்திரம் பதமினி அவர்கள் அவரை போன்ற ஒரு நடிகை இனி வர முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்..
Rate this:
12 ஜூன், 2019 - 20:38 Report Abuse
ருத்ரா இந்த நாட்டிய பேரொளி என்றும் சுடர் விட்டுக் கொண்டுதான் இருக்கும். இவர் பெயர் புகழை இதுவரை யாரும் நெருங்க வில்லை. மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு நீங்கவில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in