Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரிக்க வைத்தவருக்கு வருத்தம் தெரிவிக்காத நடிகர்கள்

12 ஜூன், 2019 - 13:28 IST
எழுத்தின் அளவு:
Top-Celebrities-did-not-say-condolence-to-Crazy-Mohan

நாடக ஆசிரியர், நடிகர், வசனகர்த்தா... இப்படி பன்முகம் கொண்டவர் கிரேசி மோகன் இரு நாட்களுக்கு முன் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு குறித்து உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்கள் பலரும் அவர்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டனர். பலர், கிரேசி மோகனின் நகைச்சுவை வசனங்களை பதிவு செய்து அவரது நகைச்சுவை உணர்வை பாராட்டினர்.

திரைப்பட ரசிகர்களுக்கு இருந்த இரங்கல் குணம் சினிமாவிலேயே இருக்கும் சில முன்னணி நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இல்லை என்பது வருத்தமான விஷயம். தங்கள் துறை சார்ந்த ஒரு பிரபலம் இறந்தால் கூட அவர்களது மறைவுக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் ஒரு வரி கூட இரங்கல் கூட தெரிவிக்காதவர்களைப் பற்றி நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, ஆர்யா, விஷால், கார்த்தி, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் எந்த இரங்கலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் வளர்ந்து வரும் நடிகர்களான சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ்குமார், பிரசன்னா போன்றவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கிரேசி மோகன் வசனம் எழுதி வெற்றி பெற்ற அருணாச்சலம் படத்தில் நடித்த ரஜினி கூட நேரில் வரவில்லை. தர்பார் படப்பிடிப்பிற்காக அவர் மும்பையில் இருந்தாலும் டுவிட்டரில் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

கிரேசி மோகன் வசனம் எழுதி வெற்றி பெற்ற படங்களில் நடித்த சில நடிகர்கள், நடிகைகள் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை. மற்ற மொழித் திரையுலகத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. தமிழ்த் திரையுலகத்தில் சில ஆண்டுகளாக மறைந்த பிரபலங்களுக்கு பலர் இரங்கல் தெரிவிக்காமல் இருப்பது தொடர்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இரவு நேர கொண்டாட்டங்களை தவிர்த்தது ஏன்?: நந்திதாஇரவு நேர கொண்டாட்டங்களை தவிர்த்தது ... பேய் விரட்டும் வேலையில் ஜி.வி.பிரகாஷ் பேய் விரட்டும் வேலையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
14 ஜூன், 2019 - 19:12 Report Abuse
Vasudevan Srinivasan வருத்தமான விஷயம்தான்
Rate this:
Tamilan - California,யூ.எஸ்.ஏ
13 ஜூன், 2019 - 13:35 Report Abuse
Tamilan இந்த கேடுகெட்ட .......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in