Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் அதிமுக.,விற்கு தாவிய நடிகர் ராதாரவி

12 ஜூன், 2019 - 11:54 IST
எழுத்தின் அளவு:
Radharavi-again-joints-in-ADMK

சென்னை : அரசியலில் கட்சி மாறுவது சகஜமான ஒன்று. தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக திகழும் நடிகர் ராதாரவி, திமுக., அதிமுக., என மாறி மாறி பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் திமுக.,வில் இருந்தவர், பின்னர் அதிமுக., பக்கம் போனார். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்தக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் திமுக.,வில் இணைந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா நடித்த, கொலையுதிர்காலம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ராதாரவி, நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்தார். இது சர்ச்சையானது. இதையடுத்து, ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்திருந்தார். அப்போது முதலே, திமுக.,வின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார் ராதாரவி. இவர் மீண்டும் அதிமுக.,வில் இணைய இருப்பதாக செய்திகள் பரவின.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மீண்டும் தன்னை அதிமுக.,வில் இணைத்து கொண்டார் ராதாரவி. அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விமர்சித்தவர்களுக்கு படத்தைப் போட்டு பதிலடி கொடுத்த சமீரா!விமர்சித்தவர்களுக்கு படத்தைப் ... மெர்சல் அக்ஷத்துக்கு கேமரா பரிசளித்த விஜய் மெர்சல் அக்ஷத்துக்கு கேமரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Tamilan - California,யூ.எஸ்.ஏ
13 ஜூன், 2019 - 13:14 Report Abuse
Tamilan இது ஒரு கேடுகெட்ட ........
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
12 ஜூன், 2019 - 16:26 Report Abuse
Endrum Indian பாவம் நடிகன்/நடிகை பணம் கொடுக்கும் மார்க்கெட் போய் விட்டால் ஏதாவது செய்து பணம் சம்பாதிக்கணும் தானே, அதுக்காகத்தான் எந்த எந்த எந்த எல்லைக்கும் போவார்கள் அந்த பணம் பார்க்க .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in