அடுத்தடுத்து வெளிவர உள்ள பெரிய படங்கள் | தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவு | ஹரிஷ் கல்யாணின் டீசல் | பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி | சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அர்ச்சனா | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி | இது சூப்பர் ஜோடி : திரவியும் - ஸ்வாதி ஜோடிக்கு ரசிகர்கள் கமெண்ட் | சிம்பு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனே - நயன்தாரா | மீனாவின் கணவர் மரணம் ; யாரையும் பயமுறுத்த வேண்டாம் : குஷ்பு |
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு, தற்போது இயக்குனர் ஷங்கர் குறித்தும், சிம்புதேவன் குறித்தும் ஒரு நேர்காணலில் அவன் இவன் என்று ஒருமையில் பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
23ம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர், இயக்குனர் சிம்புதேவன் குறித்து பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இயக்குனர் சிம்புதேவனின் 23ம் புலிகேசி படத்தின் மூலம் வடிவேலு ஹீரோவானார். அதை வெற்றிப்படமாக தந்தார் சிம்புதேவன். புலிகேசிக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன், எலி, தெனாலிராமன் படங்கள் அவர் தலையீட்டாலேயே தோல்வி அடைந்தது. இது அனைவருக்கும் தெரியும்.
ஒரு இயக்குனரை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசி இருப்பது மிகவும் தவறான அணுகுமுறை. ஒரு இயக்குனர் என்ற முறையில் வடிவேலுவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.