Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜராஜன் பற்றி சர்ச்சை பேச்சு : பா.ரஞ்சித் கைதாகிறார்.?

12 ஜூன், 2019 - 10:15 IST
எழுத்தின் அளவு:
Pa-Ranjith-may-be-arrest

அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் பா.ரஞ்சித், அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தின் மூலம் புகழ் பெற்றார். பிறகு ரஜினி நடித்த காலா, கபாலி படங்களை இயக்கினார். கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் தலித் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஞ்சித், மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி பாலா, மாவட்ட எஸ்பி.,யிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

"இயக்குனர் பா.ரஞ்சித் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். தமிழ் பெண்களை இழிவுபடுத்தி உள்ளார். சாதி பிளவு ஏற்படும் வகையில் அவரது பேச்சு உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி., உத்தரவின் பேரில் திருப்பனந்தாள் போலீசார் மதகலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.

இன்று(ஜூன் 12) அல்லது நாளை(ஜூன் 13) இந்த வழக்கில் பா.ரஞ்சித் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கிரீஸ் நாட்டில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்கிரீஸ் நாட்டில் நயன்தாரா, விக்னேஷ் ... எதையும் சந்திக்க தயார் : விஷால் எதையும் சந்திக்க தயார் : விஷால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கூடுவாஞ்சேரி கோகிலா வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணும்.
Rate this:
ரஞ்சித்குமார் சரவணபாண்டியன். இவன ஜாதி கலவரத்தை தூண்டி விடும் வழக்குல கைது பண்ணனும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in