Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரீஸ் நாட்டில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

11 ஜூன், 2019 - 19:14 IST
எழுத்தின் அளவு:
Nayanthara,-Vigneshshivan-tour-to-Greece

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலர்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால், இருவரும் தங்களை காதலர்கள் என இதுவரை சொல்லிக் கொண்டதே இல்லை. அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் இந்த ஜோடி தற்போது கிரீஸ் நாட்டில் சுற்றுப் பயணத்தில் உள்ளது.

'தர்பார், விஜய் 63' ஆகிய படங்களில் தொடர் படப்பிடிப்பிலிருந்து நயன்தாரா அவற்றிலிருந்து கொஞ்சம் விலகி ஓய்வெடுக்க விரும்பினாராம். காதல் ஜோடி இந்த முறை தேர்ந்தெடுத்த நாடு கிரீஸ். இதற்காக சில தினங்களுக்கு முன்பு அவர்கள் அங்கு புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வழக்கம் போல விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். வழக்கம் போல ரசிகர்கள் அதற்கு அவர்களது கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு புகைப்படத்தில் கமெண்ட்டுகளை பிளாக் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இருவரது வீட்டிலும் அவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டாலும் நயன்தாராவிற்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டேயிருப்பதால் இப்போதைக்கு இருவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வடிவேலுவுக்கு சமுத்திரகனி கண்டனம்வடிவேலுவுக்கு சமுத்திரகனி கண்டனம் ராஜராஜன் பற்றி சர்ச்சை பேச்சு : பா.ரஞ்சித் கைதாகிறார்.? ராஜராஜன் பற்றி சர்ச்சை பேச்சு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
12 ஜூன், 2019 - 04:17 Report Abuse
 Muruga Vel முழுக்க நனைஞ்சாச்சு ..முக்காடு எதுக்கு ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in