Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலுவுக்கு சமுத்திரகனி கண்டனம்

11 ஜூன், 2019 - 16:52 IST
எழுத்தின் அளவு:
Samuthirakani-slams-Vadivelu

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த இந்த படம் 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மீண்டும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்க, வடிவேலு நடிக்கயிருந்தார். அதற்காக பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டு, இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என தலைப்பிட்டு சில நாட்களாக படப்பிடிப்பும் நடைபெற்றது.

வடிவேலுவிற்கும், சிம்புதேவனுக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதையடுத்து வடிவேலு அப்படத்தில் நடிக்க மறுத்ததால் அவரால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று டைரக்டர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினார். அதுகுறித்த பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், ஷங்கர் கிராபிக்ஸ் டைரக்டர் என்று சொன்ன வடிவேலு, சிம்புதேவனுக்கு நடிப்பு சொல்லித்தரவே தெரியாது. படம்தான் வரைந்து காட்டுவார் என்று சொன்னார்.

இதையடுத்து, சிம்புத்தேவனிடம் உதவியாளராக இருந்த மூடர்கூடம் நவீன், வடிவேலு பேசியதை கண்டித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது சமுத்திரகனியும் வடிவேலுவுக்கு தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளர்.

அதில், அண்ணன் வடிவேலுவின் பேட்டியைப் பார்த்தேன். இயக்குனர் ஷங்கர், சிம்புதேவன் ஆகியோரை நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. சிம்புதேவனின் கிரியேட்டிவிட்டி புலிகேசி தவிர மற்ற படங்களிலும் தெரியும். இயக்குனர்களை அவமதிக்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 63 பட தலைப்பு பிகிலு.?விஜய் 63 பட தலைப்பு பிகிலு.? கிரீஸ் நாட்டில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கிரீஸ் நாட்டில் நயன்தாரா, விக்னேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
11 ஜூன், 2019 - 17:44 Report Abuse
 N.Purushothaman 61 லட்ச ரூபாய் வருமான வரி ஏய்ப்பில் வடிவேலுவின் இரண்டு முறை செய்யப்பட முறையீட்டை வருமானவரி தீர்ப்பாயம் நிராகரித்து பணத்தை கட்ட சொல்லி உத்தரவு இட்டுள்ளது ...இதன் எதிரொலியாக வடிவேலுவின் ஆவேசம் வரும் நாட்களில் மேலும் அதிகரித்து வாய்க்கு வந்தபடி பேசுவதற்கு வாய்ப்புக்கள் ஏராளம் உள்ளன ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in